EPFO பயனாளர்களுக்கு குட் நியூஸ்! மூன்று மடங்கு பென்ஷன் உயருகிறதா?

இபிஎஃப்ஓ கூட்டத்தில் சிபிடி ஈக்விட்டி வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 7, 2022, 08:37 AM IST
  • இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பென்ஷன் மூன்று மடங்கு அதிகரிக்கப்படலாம்.
  • ரூ.1000லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
EPFO பயனாளர்களுக்கு குட் நியூஸ்! மூன்று மடங்கு பென்ஷன் உயருகிறதா? title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் கூடிய விரைவில் மகிழ்ச்சியான செய்தியை பெறுவதோடு அவர்களது கணக்கில் மிகப்பெரிய தொகையை பெற போகிறார்கள்.  அதாவது வெளியான சில தகவல்களின்படி இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக பென்ஷன் மூன்று மடங்கு அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிக்கையில் அடுத்த மாதத்தில் இபிஎஃப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  அப்படி அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ள அந்த கூட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3 மடங்காக அதாவது ரூ.1000லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் இபிஎஃப்ஓ-ன் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.  மேலும் இந்த கூட்டத்தில் பங்கு முதலீட்டின் வரம்பு அதிகரிப்பது குறித்தும், சிபிடி ஈக்விட்டி வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதேசமயம் பங்குசந்தையின் ஏற்ற இரக்கம் காரணமாக தொழிலாளர் சங்கம் ஈக்விட்டி முதலீட்டை அதிகரிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

மேலும் படிக்க | 7th Pay Commission: சம்பள உயர்வு, பதவி உயர்வு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்!

நிதி அமைச்சகம் சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்தது, இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.  ஏனெனில் இந்த விகிதம் இதுவரை இருந்த நான்கு டீகேட்களை விட மிகக் குறைந்த அளவாகும்.  அரசாங்கத்தின் இந்த முடிவு 65 மில்லியன் சந்தாதாரர்கள் அதாவது 6.5 கோடி வேலை தேடுபவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.  கடன் நிதிகள் தேவையான வருமானத்தை ஈட்டவில்லை என்று கூறப்படுகிறது, அதனால் பங்குகளில் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் வருவாயைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இதுகுறித்து பரிசீலிக்க நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழுவின் முக்கியமான கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆயுள் காப்பீட்டு திட்டம் எடுக்க போறீங்களா? இத கவனத்துல வச்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News