ரேஷன் கார்டு புதுப்பிப்பு: இந்திய நாட்டின் அனைத்து ரேஷன் கார்ட் பயனாளிகளுக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி, ரேஷன் கடைக்காரர்கள் பொருட்களின் எடையில் எந்த வித ஏமாற்று வேலையையும் செய்ய முடியாது. ரேஷன் கடைக்காரர்களுக்காக அரசாங்கம் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. ஒருபுறம், அரசு இலவச ரேஷன் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்துள்ளது. மறுபுறம், மோடி அரசாங்கத்தின் லட்சியமான 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்' நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த முடிவால் ஏற்பட்டுள்ள அனுகூலமான விளைவுகளும் கண்கூடாகத் தெரிகின்றன. இதைப் பற்றி இந்த பதிவில் விவரமாக அறியலாம்.
ரேஷன் கடைகளில் பொருட்களை எடை போடுவதில் பிரச்னை இருக்காது:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆஃப் சேல் (EPOS) சாதனங்களை இணைக்க மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை திருத்தியுள்ளது. இதன்பிறகு அனைத்து ரேஷன் கடைக்காரர்களும் இனி மின்னணு தராசு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது
அரசின் இந்த உத்தரவுக்குப் பிறகு, தற்போது நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் ஆன்லைன் மின்னணு விற்பனை மையத்துடன் அதாவது பிஓஎஸ் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, இப்போது ரேஷன் கடைகளில் பொருட்களின் எடையில் குளறுபடிகளுக்கு வாய்ப்பே இல்லை. பொது விநியோகத் திட்டத்தின் (பி.டி.எஸ்) பயனாளிகளுக்கு எந்தச் சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காமல் இருக்க, ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் ஆன்லைனிலும், நெட்வொர்க் இல்லாத பட்சத்தில் ஆஃப்லைனிலும் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்ட புதிய வழிமுறைகள்
இதற்கான விதியை தெரிந்துகொள்ளுங்கள்
NFSA இன் கீழ் இலக்குடன் கூடிய பொது விநியோக முறையின் (TPDS) செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம், சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் உணவு தானியங்களின் எடையை சீர்திருத்துவதற்கான செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சியே இந்தத் திருத்தம் என்று அரசாங்கம் கூறுகிறது. பல இடங்களில் ரேஷன் கடைக்கார்ரகள் பொருட்களின் எடையில் மோசடி செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், நாட்டில் உள்ள சுமார் 80 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து கிலோ கோதுமை மற்றும் அரிசி (உணவு தானியங்கள்) ஒரு கிலோவுக்கு முறையே ரூ.2-3 என்ற மானிய விலையில் அரசாங்கம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் பொருட்கள் முழுவதுமாக தேவையில் இருப்பவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது வந்துள்ள மாற்றம் என்ன?
EPOS கருவிகளை சரியான முறையில் இயக்கி பராமரிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கவும், குவிண்டாலுக்கு ரூ.17.00 கூடுதல் லாபத்தில் சேமிப்பை ஊக்குவிக்கவும், உணவுப் பாதுகாப்பு (மாநில அரசு விதிகளுக்கான உதவி) 2015 இன் துணை விதிகளின் (2), விதி 7 திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் கீழ், பாயிண்ட் ஆஃப் சேல் சாதனங்களை வாங்குதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றின் விலைக்கு வழங்கப்படும் கூடுதல் மார்ஜில், சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தொகையை சேமித்தால், அதை, மின்னணு எடைத் தராசின் கொள்முதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுடன் இரண்டையும் ஒருங்கிணைக்க பயன்படுத்தலாம். அதாவது, பயனாளிகளுக்கு முழுமையான அளவில், எந்த ஏமாற்று வேலையும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வழங்க அரசு இப்போது முழு முழைப்புடனுன் கண்டிப்புடனும் உள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ