SBI அளிக்கும் எச்சரிக்கை: இவற்றில் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணம் அம்பேல்!!

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை, எந்தவொரு நபரிடமும் தங்களது கார்ட், பின், சி.வி.வி, கடவுச்சொல் போன்றவற்றை கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 8, 2021, 04:17 PM IST
  • SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
  • ஃபிஷ்ஷிங் வழக்குகள் தீவிரமடைந்துள்ளதாக SBI தெரிவித்துள்ளது.
  • சைபர் குற்றவாளிகள் எஸ்பிஐ பெயரில் மக்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள்-SBI.
SBI அளிக்கும் எச்சரிக்கை: இவற்றில் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணம் அம்பேல்!!  title=

SBI Alert: SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எந்தவொரு நபரிடமும் தங்களது கார்ட், பின், சி.வி.வி, கடவுச்சொல் ஆகியவற்றை கொடுக்க வேண்டாம் என SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது. SBI எந்த விதத்திலும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து தரவை கேட்காது என்பதையும் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. 

பேராசை பெரிய நஷ்டத்தை கொண்டு வரலாம்

இந்தியாவின் மிகப்பெரிய பொது வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பேராசையில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. ஃபிஷ்ஷிங் வழக்குகள் தீவிரமடைந்துள்ளதாக SBI தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பேராசைக்கு ஆளானால், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும் என வங்கி கூறியுள்ளது.

சைபர் குற்றவாளிகள் பலர் உள்ளனர்

தற்போது சைபர் குற்றவாளிகள் (Cyber Fraud) அதிக அளவில் இருப்பதாகவும் அவர்கள் பலவிதங்களில் மக்களை இலக்காக்கி வருவதாகவும் வங்கி கூறியது.

சந்தேகத்திற்கிடமான எண் அல்லது பெயரிலிருந்து அனுப்பப்பட்ட செய்தியைக் கிளிக் செய்து அதில் உள்ள இணைப்பைத் திறக்க வேண்டாம் என்று SBI வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. அப்படி செய்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை குற்றவாளிகள் பெறக்கூடும் என SBI எச்சறித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் உங்கள் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் காலி செய்து விடக்கூடும் என்றும் வங்கி கூறியுள்ளது. எந்தவொரு மோசடியிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று SBI மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ALSO READ: SBI கார்டு வாடிக்கையாளர்கள் இனி Jio Pay இயங்குதளத்தில் பரிவர்த்தனை செய்யலாம்..

ரிவார்ட் பாயிண்ட் மோகத்தில் சிக்க வேண்டாம்

இந்நாட்களில், சைபர் குற்றவாளிகள் (Cyber Criminals) எஸ்பிஐ பெயரில் மக்களுக்கு செய்திகளை அனுப்பி அவர்களை தங்கள் வலையில் சிக்க வைப்பதாக சில ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவை எழுதியுள்ளது. சைபர் குற்றவாளிகள், வெகுமதி புள்ளிகளுக்கான ஆசையைக் காட்டி, வாடிக்கையாளர்களை போலி இணைப்பைக் கிளிக் செய்ய வைத்து முழு தகவலையும் திருடுகிறார்கள் என்று வங்கி கூறியது. இப்படி நடக்காமல் வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என SBI எச்சரித்துள்ளது.

எஸ்பிஐ-யின் ஆலோசனை

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு நபரிடமும் தங்களது கார்ட், பின், சி.வி.வி, கடவுச்சொல் போன்றவற்றை கொடுக்கக்கூடாது என்று எச்சரித்தது. SBI தொலைபேசியிலோ, எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தனது வாடிக்கையாளர்களிடமிருந்து தரவை கேட்காது என்பதையும் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

எந்த சந்தேகத்திற்கிடமான இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். எந்தவொரு இணைப்புக்கும் செல்வதற்கு முன், அது பாதுகாப்பானதா இல்லையா என்பதைப் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இது மட்டுமல்லாமல், உங்கள் எந்த தகவலையும் தொலைபேசி அழைப்பில் கொடுக்காதீர்கள். மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல்களை கொடுக்க வேண்டாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் சைபர் குற்றவாளிகளின் கைக்கு போய்விடும்.

ALSO READ: SBI Power Demat Account: அதிரடி கடன் வசதி, இலவச ATM Card, இன்னும் எக்கச்சக்க offers

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News