SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே

SBI தனது டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை துவக்கியுள்ளது. இது ATM-ம்மில் நடக்கும் மோசடிகளை தடுப்பதில் உதவி செய்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2021, 01:48 PM IST
  • SBI Card வகையைப் பொறுத்து, தினசரி பணம் எடுக்கும் வரம்பு ரூ .20,000 முதல் ரூ .1 லட்சம் வரை மாறுபடும்.
  • அனைத்து வித பரிவர்த்தனைகளிலும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டது SBI.
  • விசாரணைகள், மினி ஸ்டேட்மெண்டுகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டாம் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.
SBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? முழு விவரம் உள்ளே title=

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஏழு வகையான ஏடிஎம்-கம்-டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அட்டை வகையைப் பொறுத்து, தினசரி பணம் எடுக்கும் வரம்பு ரூ .20,000 முதல் ரூ .1 லட்சம் வரை மாறுபடும்.

ஜூலை 1 முதல், SBI தனது ATM-மிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் உள்ள தகவல்களின்படி, SBI, சேமிப்பு கணக்கு (Savings Account) வைத்திருக்கும் தனது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு, ஒரு மாதத்தில் 8 இலவச பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது. பின்னர், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

SBI டெபிட் கார்டில், தினசரி ATM-ல் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள வரம்புகள் பின்வருமாறு.

1) SBI கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டு

ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு: 20,000 ரூபாய்

2) SBI குளோபல் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு: 40,000 ரூபாய்

3) SBI கோல்ட் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு: 50,000 ரூபாய்

4) SBI பிளாட்டினம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு: 1,00,000 ரூபாய்

5) SBI இன்டச் டாப் அண்ட் கோ டெபிட் கார்டு

ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு: 40,000 ரூபாய்

6) SBI மும்பை மெட்ரோ காம்போ அட்டை

ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு: 40,000 ரூபாய்

7) SBI மை கார்டு இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ATM-ல் பணம் எடுக்கும் வரம்பு: 40,000 ரூபாய்

ALSO READ: இந்த paytm சலுகையின் கீழ் நீங்கள் இலவச எரிவாயு சிலிண்டரைப் பெறலாம்!

OTP மூலம் SBI ATM-ல் பணம் எடுக்கும் முறை:

SBI செப்டம்பர் 18 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ATM-களிலும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான வசதியைத் தொடங்கியுள்ளது. ரூ .10,000 க்கு மேல் பணம் எடுக்க OTP வரும். இதற்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வங்கி அனுப்பிய OTP ஐ உள்ளிட வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால், பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த கடன் வழங்குநரான SBI ட்வீட் செய்து, " SBI ATM-மில் உங்கள் பரிவர்த்தனை முன்பை விட இப்போது பாதுகாப்பானதாக இருக்கும்" என்று கூறியுள்ளது.

ரூ .10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு OTP அடிப்படையில் பணம் எடுக்கும் வசதிக்கான எற்பாடுகளை SBI, 18.09.2020 முதல் 24X7, அதாவது எப்போதும் கிடைக்கும்படி செய்துள்ளது. சமீபத்தில் SBI தனது டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை துவக்கியுள்ளது. இது ATM-ம்மில் நடக்கும் மோசடிகளை தடுப்பதில் உதவி செய்கிறது.

வங்கி தனது வாடிக்கையாளர்களை, அனைத்து வித பரிவர்த்தனைகளிலும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டது. விசாரணைகள், மினி ஸ்டேட்மெண்டுகள் எனப்படும் சிறு அறிக்கைகள் தொடர்பான எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளை புறக்கணிக்க வேண்டாம் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் DA, DR, பதவி உயர்வு பற்றிய good news விரைவில்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News