Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!

Freebies And Budget 2024: அரசின் இலவச திட்டங்கள்: அரசின் இலவச திட்டங்களுக்கு வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறதா? நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2024, 11:22 PM IST
  • அரசு கொடுக்கும் இலவசங்கள்
  • அவசியமா இலவசம் மக்களின் கேள்வி
  • பொருளாதார நிபுணர்களின் கருத்து
Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்! title=

இன்னும் சில நாட்களில் மத்திய அரசின் பட்ஜெட் வெளியாகவிருக்கும் நிலையில், இலவசத் திட்டங்கள் கொடுப்பதன் விளைவுகள் தொடர்பான விவாதங்கள் மீண்டும் விவாதப்பொருளாகியிருக்கிறது.  சமூக வலைதளங்களில் 'எனது வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கே, இலவசத் திட்டங்களுக்கு அல்ல' என்ற கருத்துக்கள் வைரலாகிவருகிறது. இலவசத் திட்டங்களுக்காக வரி செலுத்துவோரின் பணத்தை அரசு வீணடிப்பதாக முன் வைக்கப்படும் குற்றச்சாடு குறித்து பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

அரசின் இலவச திட்டங்கள் 
இலவச திட்டங்கள் பொருளாதாரத்திற்கு சுமை என்று சொல்லப்படும் நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் போட்டிப்போட்டுக் கொண்டு வாக்குறுதிகளைக் கொடுத்தனர். அரசியல் கட்சிகளும், தங்கள் தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. அவற்றில் இலவச திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

வரி செலுத்துபவர்களின் எதிர்ப்பு

வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக தங்கள் கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்துகின்றனர். இது தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக எதிரொலிக்கிறது. உண்மையில் இலவசங்கள் கொடுப்பது தொடர்பாக பல பொருளாதார ஆய்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டங்கள் உண்மையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமை என்று கூறும் பொருளாதார வல்லுநர்கள், அரசு ஒரு கட்டத்தில் இலவசங்களை நிறுத்தியே ஆக வேண்டும் என்று சொல்கின்றனர்.

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!

இலவசங்களால் ஏழைகளுக்கு பயனில்லை
இந்திய அரசின் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் இலவசங்கள் கொடுப்பது தவறு என்று சொல்கிறார், இலவசங்களின் பலன்கள், தகுதியில்லாதவர்களுக்கே அதிகமாக செல்வதாகச் சொல்கிரார். NREGA-ன் கீழ் வழங்கப்படும் வசதிகள், வேலையில்லாதவர்கள் அல்லது தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இலவச மின்சாரம், இலவச ரேஷன் போன்ற வசதிகளை, இலவசங்களை பெறுவதற்கான தகுதியில்லாதவர்களும் பெறுகின்றனர். எனவே, இலவசம் கொடுக்கும் செயல்முறை வெளிப்படையானதாக இல்லாத வரை இலவசங்கள் கொடுப்பது வீண் என்று அவர் சொல்கிறார்.

அரசின் மொத்த பட்ஜெட் சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையில்,இலவச திட்டங்களுக்கான செலவு எவ்வளவு ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும் என்று கூறும் அவர், சுமார் ரூ.4-5 லட்சம் கோடி இலவசங்களுக்காக செலவிடப்படுவதாக கூறுகிறார்.

மத்திய அரசு, வரி வருவாய் மூலம்  சுமார் 25 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மொத்த வரி வருமானத்தில் 15 முதல் 20% இலவசங்கள் அல்லது இலவச உதவி செய்யும் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. இது பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய சுமை என்பதுடன், தகுதியில்லாதவர்களும் பெறும் நிலையில், இலவசத் திட்டங்களின் நோக்கமும், அரசின் பணமும்  வீணாகிறது.

வரி செலுத்துபவர்கள், தங்கள் வரிப்பணத்தை அரசு தேவையில்லாமல் வீணடிப்பதாக கூறும் நிலையில், பொருளாதார நிபுணர்களும் அதன் பக்கவிளைவுகள், பின்விளைவுகள், சாதக பாதகங்களைப் பற்றி அவ்வப்போது சொல்லி வருகின்றனர்.

மேலும் படிக்க | கோடீஸ்வரராக இப்படியெல்லாம் வழி இருக்கா? இலக்கு வைத்தால் எல்லாம் சாத்தியமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News