Sukanya Samriddhi Yojana: பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதமானது ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எவ்வித மாற்றமும் அடையவில்லை. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் உங்களுக்கு 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் எதிர்கால கவலையை நீக்கக்கூடிய இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அந்த குழந்தையின் பெற்றோர்/பாதுகாவலர் கணக்கை தொடங்கலாம். அதன் பின்னர் அந்த பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும்பட்சத்தில் அந்த பெண்ணே அந்த கணக்கை நிர்வகிக்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் நீங்கள் இந்த திட்டத்தில் கணக்கை திறந்து கொள்ளலாம். அதுவே இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து மூன்று குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் அவர்களுக்கு இந்த திட்டத்தில் கணக்கை திறந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | இவர்கள் ஆதார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்! ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்
எந்தவொரு வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை திறந்துகொள்ளலாம். இந்த கணக்கை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிற வங்கி கிளைகள் அல்லது தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மொத்த முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் மொத்த முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இந்த கணக்கை திறக்கும்போது குறைந்தபட்ச தொகையாக ரூ.250ஐ டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதேசமயம் இந்த கணக்கில் குறைந்தபட்ச தொகையை நீங்கள் பராமரிக்கவில்லை என்றால் கணக்கை சரியாக பராமரிக்கவில்லை என்று உங்களுக்கு ரூ.50 அபராதமாக விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 7.6 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டது. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80C இன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது. இந்த திட்டத்தில் ரூ.250 செலுத்தி கணக்கைத் தொடங்கி, முதல் மாதம் ரூ.750-ஐத் தொடர்ந்து மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், உங்கள் மொத்த ஆண்டு வைப்புத் தொகை ரூ.12,000 ஆக இருக்கும். உதாரணமாக உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தபொழுது நீங்கள் இந்த திட்டத்தில் கணக்கை திறந்தால் அந்த குழந்தைக்கு 21 வயதாகும் போது உங்கள் முதலீடு ரூ. 1,80,000 ஆக இருக்கும் மற்றும் உங்களுக்கு வட்டியாக ரூ. 3,47,445 கிடைக்கப்பெறும். இந்த திட்டத்தில் 21 ஆண்டுகால முதிற்சிக்கு பிறகு உங்களுக்கு மொத்தமாக ரூ.5,27,445 கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ