வீடு அல்லது சொத்து வாடகைக்கு கொடுக்கப்படும் போதெல்லாம், வீட்டு உரிமையாளர் அதாவது வீட்டின் உரிமையாளர் வாடகை ஒப்பந்தத்தில் தேவையான உட்பிரிவுகளை உள்ளடக்குகிறார். வாடகைதாரர் அவரை ஏமாற்ற முடியாத அளவிற்கு பிரிவுகள் சேர்க்கப்படுகின்றன. வீட்டு உரிமையாளரின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டாலும், வாடகைதாரர்கள், வீட்டு வாடகை ஒப்பந்தத்தில் சில முக்கியமான உட்பிரிவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், அதனால் வாடகைதாரர் நலனும் பாதுகாக்கப்பட்டு எந்த மோசடியும் நடக்காமல் இருக்கும். வாடகை ஒப்பந்தத்தில் வாடகைதாரர் சேர்க்க வேண்டிய சில பிரிவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. அட்வான்ஸ் தொகை
அனைத்து வீட்டு உரிமையாளர்களும், வாடகைதாரரிடமிருந்து ஒரு பாதுகாப்பு வைப்புத்தொகை பெறுகின்றனர். சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு பெறும் நோக்கில், அடவான்ஸாக ஒரு தொகையை வசூலிக்கின்றன. அதே போன்று, வாடகைதாரர் தனது வாடகையைச் செலுத்தத் தவறினால், அந்த பணம் அட்வான்ஸ் தொகையிலிருந்து கழிக்கப்படும் என்பதால், இது வீட்டு உரிமையாளருக்கு இது பாதுகாப்பு அளிக்கிறது. பாதுகாப்பு வைப்புத் தொகையும் வாடகை ஒப்பந்தத்தில் காட்டப்பட்டிருந்தாலும், ஒப்பந்தத்தை உருவாக்கும் போது, அதை திரும்பப் பெறுவது பற்றியும் குறிப்பிடப்பட வேண்டும். வாடகைதாரர் வீட்டை விட்டு வெளியேறும் போது, வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் தொகையை அவருக்குத் திருப்பித் தருவார் என்பதை வாடகை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும். வாடகைதாரரால் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதை இதிலிருந்து சரிசெய்யலாம்.
2. லாக் இன் பீரியட் மற்றும் வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்தல்
வாடகை ஒப்பந்தத்தில், இரு தரப்பினரும் சமமான அளவு கால அவகாசம் பெற வேண்டும். அதில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பு வழங்கப்படும் விஷயத்தை பொறுத்தவரை, வாடகைதாரர் தனது வசதிக்கேற்ப வாடகை ஒப்பந்தத்தில் முன்னறிவிப்பு காலத்தை குறிப்பிடுவது குறித்து விளக்கமாக கூறப்பட வேண்டும். சில வாடகை ஒப்பந்தங்கள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளன. அதன் கீழ் வாடகை ஒப்பந்தத்தை அதற்கு முன் ரத்து செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், வாடகைதாரர் வீட்டை விட்டு வெளியேறினால், அவர் இன்னும் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதே போன்று லாக் இன் காலத்திற்கு முன்பாக, உரிமையாளர், வாடகைதாரரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்வதில் இருந்து பாதுகாக்க, வாடகை ஒப்பந்தத்தில் லாக்-இன் காலத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
3. தேய்மானம் தொடர்பான இழப்பீடு
வாடதகைதாரர் எந்த வகையான சேதத்திற்கு பொறுப்பாவார் என்பது ஒப்பந்தத்தில் தெளிவாக இருக்க வேண்டும். வாடகைதாரர் சாதாரண தேய்மானத்திற்கு பொறுப்பேற்க மாட்டார் என்று வாடகை ஒப்பந்தத்தில் ஒரு பிரிவைச் சேர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். வாடகைதாரர் பெரிய சேதங்களுக்கு மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் நீண்ட நேரம் வீட்டில் குடியிருக்கும் போது, வாடகைதாரர் பணம் செலுத்த வேண்டிய சில சாதாரண தேய்மானங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
4. வீட்டில் இருக்கும் வசதிகளின் முழுமையான பட்டியல்
நீங்கள் வாடகை ஒப்பந்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் வசதிகளின் முழுமையான பட்டியலைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களையும் அதில் சேர்க்கவும். இல்லை என்றால், நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களுக்கு ஆரம்பத்தில் குறைவான வசதிகள் வழங்கப்பட்டிருக்கலாம், ஆனால் சில தவறான புரிதலின் காரணமாக உங்களுக்கு அதிக வசதிகள் வழங்கப்பட்டதாக வீட்டு உரிமையாளர் நினைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், வீட்டு உரிமையாளர் அவர் பார்க்க முடியாத உபகரணங்களை உங்களிடமிருந்து மீட்டெடுக்க முடியும். உதாரணத்திற்கு, ஒரே ஒரு குளியலறையில் கீசர் வசதி உங்களுக்கு கிடைத்திருக்கலாம், ஆனால் பின்னர் இரண்டு குளியலறைகளிலும் கீசர் வழங்கியதாக வீட்டு உரிமையாளர் கூறலாம்.
5. நிலுவை தொகை
நீங்கள் வாடகை ஒப்பந்தம் செய்யும்போது, நீங்கள் வாடகைக்கு எடுக்கும் போது, வீட்டிற்கான, மின்சாரம் மற்றும் இதர கட்டணங்கள் அல்லது பில்கள் எதுவும் நிலுவையில் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது மின்சாரக் கட்டணம் அல்லது சொசைட்டி பராமரிப்பு அல்லது தண்ணீர் கட்டணம் போன்றவையாக இருக்கலாம். தொடக்கத்தில் இது தொடர்பான விதிகளை சரியாக குறிப்பிடவில்லை என்றால், அதற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
6. ஒப்பந்தத்தை புதுப்பித்தல் மற்றும் வாடகை உயர்வு
வாடகை ஒப்பந்தத்தை எப்போது புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் வாடகை ஒப்பந்தத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும், புதுப்பித்தல் நேர வாடகையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து முன்கூட்டியே விதிகள் முடிவு செய்ய வேண்டும். வாடகை ஒப்பந்தத்தில் இந்த பிரிவைச் சேர்ப்பதை உறுதிசெய்யவும்.
7. வாடகை ஒப்பந்தம் செய்வதற்கான செலவு
வாடகை ஒப்பந்தம் செய்யப்படும் போது, அதற்குச் செலவு ஏற்படும். வாடகை ஒப்பந்தத்தை தயாரிக்கும் செலவை யார் ஏற்பார்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த செலவுகள் வீட்டு உரிமையாளரால் ஏற்கப்படுகின்றன, ஆனால் பல சந்தர்ப்பங்களில் வாடகை ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான செலவை வாடகைதாரரிடம் வசூலிக்கப்படுகிறது.
8. சொத்தைப் பயன்படுத்துதல்
வாடகை ஒப்பந்தத்தை தயாரிக்கும் போது, நீங்கள் எடுக்கும் சொத்தை எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வாடகைக்கு எடுத்த சொத்தை பயன்படுத்த விரும்பினால், அதை முன்கூட்டியே வாடகை ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அது பின்னர் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ