ஆப்பிள் வாட்ச் பயங்கர கனவுகளிலிருந்து விடுபட உங்களுக்கு உதவிடும். ஆப்பிள் வாட்சின் இந்த செயலிக்கு எஃப்.டி.ஏ (FDA) ஒப்புதல் அளித்துள்ளது
உங்களுக்கு பயமுறுத்தும் கனவுகள் வந்து தொல்லை கொடுக்கிறதா. நீங்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு சோர்ந்து விட்டீர்களா, அப்படி இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஏனென்றால் இப்போது ஆப்பிள் ( APPLE) கொண்டு வரும் ஒரு தொழில்நுட்பம் மூலம் இதற்கான தீர்வு வந்துள்ளது, அது உங்களுக்கு வரும் பயமுறுத்தும் கனவுகளில் இருந்து உங்களை விடுதலை செய்யும்.
இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்து நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் (America) உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்சுடன் செயல்பட உள்ள இந்த செயலி நைட்வேர் (Nightware) என்று பெயரிடப்பட்டுள்ளது. பயமுறுத்தும் கனவுகள் வரும் 22 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த செயலி தூக்கத்தின் போது இதயத் துடிப்பைக் கண்காணித்து அதை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தகவல் கொடுக்கிறது. நைட்வேர் செயலி ஆப்பிள் வாட்ச் மூலம் தரவை சேகரிக்கிறது. இந்த தரவின் அடிப்படையில், பயனருக்கு ஒரு தனிப்பட்ட தூக்க பழக்கம் குறித்த சுயவிவரம் உருவாக்கப்படுகிறது.
இதற்குப் பிறகு, இதயத் துடிப்பு மற்றும் உடல் இயக்கத்தின் அடிப்படையில், ஆப்பிள் கடிகாரங்கள் உங்களுக்கு ஒரு பயங்கரமான கனவு வந்தால், அதை பற்றி அறிந்து கொள்ளும். பயனர்கள் பயமுறுத்தும் கனவுகளைக் கொண்டிருப்பதாக வாட்ச் உணர்ந்தவுடன், அவர்கள் ஆப்பிள் வாட்சில் அதிர்வு ஏற்பட்டு எச்சரிக்கையைப் பெறுகிறார்கள்.
பயனர்கள் தூங்கும் போது ஆப்பிள் வாட்சை அணிய வேண்டியது அவசியம். நைட்வேர் மருத்துவர்களின் பிரிஸ்கிரிப்ஷன் பேரில் மட்டுமே கிடைக்கும் என்று எஃப்.டி.ஏ (FDA) கூறியுள்ளது.
ALSO READ | சீனாவை கை கழுவும் PUBG நிறுவனம்... இந்தியாவிற்கு திரும்புவது எப்போது..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR