SBI அளித்த குட் நியூஸ், இந்த சூப்பர் வசதியை மார்ச் வரை பெறலாம்

ஃபிக்ஸட் டெபாசிட்: மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமான 'SBI Wecare' ஐ மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பதாக SBI அறிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 20, 2022, 11:18 AM IST
  • எஸ்பிஐ வெளியிட்ட மற்றொரு சிறந்த செய்தி
  • இந்த வசதி மார்ச் மாதத்திற்குள் கிடைக்கும்
  • பாரத ஸ்டேட் வங்கி முக்கிய அப்டேட்
SBI அளித்த குட் நியூஸ், இந்த சூப்பர் வசதியை மார்ச் வரை பெறலாம் title=

பாரத ஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: உங்கள் வங்கிக் கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) இருந்து, நீங்கள் மூத்த குடிமகனாக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். ஆம், மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) அதிக வருமானத்தை பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டத்தை எஸ்பிஐ மீண்டும் நீட்டித்துள்ளது.

நாட்டில் இருக்கும் பொதுத் துறைக்கு வங்கிக்கு மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான 'எஸ்பிஐ வீகேர்' ஐ மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டமானது முன்னதாக செப்டம்பர் 2020 இல் பாரத ஸ்டேட் வங்கியால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு மூத்த குடிமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த திட்டத்தை நீட்டிக்க மீண்டும் வங்கியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி; இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்

மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

30 அடிப்படை புள்ளிகளில் கூடுதல் வட்டி
பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த குடிமக்கள் சிறப்பு எஃப்டி திட்டமான  (ஃபிக்ஸட் டெபாசிட்) 'எஸ்பிஐ வீகேர்' ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எஃப்டிகளுக்கு 30 அடிப்படை புள்ளிகளில் கூடுதல் வட்டியை வழங்குகிறது. அதன்படி 5 ஆண்டுகளுக்கு எஃப்டிக்கு 5.65 சதவீத வட்டி வங்கியால் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு எஃப்டி (ஃபிக்ஸட் டெபாசிட்) மீது 6.45 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் விகிதம்
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை ரூ.2 கோடி வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் ஆகஸ்ட் 13 முதல் அமலுக்கு வந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி சாதாரண குடிமக்களுக்கு எஃப்டிகளுக்கு 2.90 சதவீதம் முதல் 5.65 சதவீதம் வரை வட்டி அளிக்கும். அதே சமயம் மூத்த குடிமக்களுக்காக செய்யப்படும் எஃப்டிக்கு (ஃபிக்ஸட் டெபாசிட்) வங்கி 3.40 சதவீதத்தில் இருந்து 6.45 சதவீதம் வரை வட்டி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மத்திய அரசுப் பணி! தமிழ்நாட்டில் அருமையான சம்பளத்தில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News