Savings: தரமா வாழ வழி என்ன தெரியுமா? இது சேமிப்புக்கான அற்புதமான ஐடியா

Plan Your Spending: நீண்ட காலத்திற்கு தரமான வாழ்க்கையைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது திட்டமிட்ட சேமிப்பு தான்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 26, 2023, 12:58 PM IST
  • நீண்ட காலத்திற்கு தரமான வாழ்க்கையைத் தொடர வேண்டுமா?
  • திட்டமிட்ட சேமிப்பின் முக்கியத்துவம்
  • சேமிப்பதற்கான வழிமுறைகள்
Savings: தரமா வாழ வழி என்ன தெரியுமா? இது சேமிப்புக்கான அற்புதமான ஐடியா title=

“செலவுக்குப் பிறகு எஞ்சியதைச் சேமிக்காதே; அதற்குப் பதிலாக சேமித்த பிறகு எஞ்சியதைச் செலவிடுங்கள்” என்பது முன்னோர் சொன்ன மொழி. பணத்தை சேமிப்பது வளமான எதிர்காலத்திற்கான பாதையை வடிவமைக்கிறது என்பதோடு, நாம் விரும்பியபடி வாழ்க்கையை வடிவமைக்கிறது. நீண்ட காலத்திற்கு தரமான வாழ்க்கையைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது திட்டமிட்ட சேமிப்பு தான்

சேமிப்பின் முக்கியத்துவம்
பணத்தைச் சேமிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான நிதி பழக்கங்களில் ஒன்றாகும். பணத்தை சேமிப்பதற்கான வழிகள் மட்டுமல்ல, காரணங்களும் முக்கியமானவை. நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள நமக்கு பணம் தேவை.

பணத்தை சேமிப்பதற்கான முக்கியமான வழிகளை தெரிந்துக் கொள்ளுங்கள். பணத்தை சேமிப்பதற்கான சரியான நேரம் எப்போது என்பதும், எந்த வழிகளில் சேமிக்க முடியும் என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும். 

செலவுகளைக் கண்காணிக்கவும்
நீங்கள் சேமிக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் தினசரி செலவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செலுத்த வேண்டிய பில்கள் உட்பட, வாங்கும் பொருட்களுக்கான செலவுகள் எவ்வளவு என்பதை குறித்து வையுங்கள். இது செலவுப் பழக்கத்தைப் புரிந்துகொள்ளவும், அவசியமில்லாத செலவுகளைக் குறைக்கவும் உதவும். 

மேலும் படிக்க | Telecom: போலி சிம் வாங்கினால் 3 ஆண்டு சிறை! ₹ 50 லட்சம் அபராதம் எந்த குற்றத்திற்கு?

சேமிப்புக்கான பட்ஜெட்
மொத்த செலவினத்தைப் புரிந்துகொள்வது பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதை புரிந்துகொள்ள உதவும். சேமிப்பு மற்றும் செலவினங்களுக்கு இடையே சரியான சமநிலையை உருவாக்க திட்டமிடல் அவசியம்.

50-30-20 விதி
உங்கள் வருமானத்தில் 50% உங்களின் அத்தியாவசியச் செலவுகளைச் சந்திக்க வேண்டும், 30% உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் செலவுகளுக்காகவும், 20% சேமிப்புக்கு என்று ஒதுக்கி வைக்க வேண்டும்.  உங்கள் திட்டமிடலுக்கு ஏற்ப செலவுகளை செய்ய முயற்சிக்கவும். சேமிப்புக்கான தொகையில் ஒருபோதும் கை வைக்க வேண்டாம். 

செலவைக் குறைக்கும் வழிகள்
உங்கள் செலவுகள் அதிகரித்தால், தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டிய நேரம் இது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ஆடம்பர பொருட்கள் அல்லது பொழுதுபோக்கிற்கான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். 

மேலும் படிக்க | SIP vs PPF: வெறும் ரூ.100 முதலீடு செய்து மும்மடங்கு லாபம் காணலாம்.. முழு கணக்கீடு இதோ 

சேமிப்பு இலக்கு 
சில நேரங்களில், பணத்தை சேமிக்க ஒரு இலக்கை நிர்ணயிப்பது அவசியம். சேமித்த பணத்தை என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள். அது குழந்தைகளின் கல்வி, விடுமுறைக்கு சுற்றுலா செல்வது, திருமணம், ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு, வீடு வாங்குவது, கார் வாங்குவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  

சேமிப்பு இலட்சியம்

நீங்கள் சேமிக்க வேண்டிய பணத்தின் அளவு உங்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால இலக்குகளைப் பொறுத்தது. குறுகிய கால இலக்குகளை 1-3 ஆண்டுகளுக்குள் அடைய முடியும், அதேசமயம் நீண்ட கால இலக்குகளை நிறைவேற்ற அதிக காலம் சேமிக்க வேண்டியிருக்கும். 

விடுமுறைகள், சுற்றுலா போன்றவற்றிற்கான சேமிப்பு குறுகிய கால சேமிப்பாகவும், குழந்தைக்கான கல்வித் திட்டங்கள், வீடு வாங்குவது, ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்தும் நீண்ட கால இலக்குக்களுக்கான சேமிப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | வருமானம் வந்தாலும் இவர்கள் மட்டும் வருமான வரியே கட்ட வேண்டாம்!!

முன்னுரிமைகளை முடிவு செய்யுங்கள்
உங்கள் முன்னுரிமைகளை சரியாக அமைப்பது அவசியம். சேமிப்பிற்கு பணத்தை ஒதுக்கும் விதம் உங்கள் இலக்குகளைப் பொறுத்தது. உதாரணமாக, ஓய்வூதியத்திற்காக சேமிக்க திட்டமிட்டால், குறுகிய கால இலக்குகளுக்காக உங்கள் பணத்தை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சரியான சேமிப்புக் கருவி எது?
பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் பல்வேறு வழிகள் உள்ளன. பெரும்பாலான முதலீட்டுத் தேர்வுகள் உங்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டெபாசிட் செய்வதாக இருக்கும்.  வருமானத்தை மனதில் வைத்துக்கொண்டு சரியான சேமிப்புக் கருவிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் முதலீடு தொடர்பான சந்தை அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சேமிப்புகளை ஆய்வு செய்யவும்
சீரான இடைவெளியில் உங்கள் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும். நிதி நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றங்களைச் செய்ய இது உதவும். கூடுதலாக, உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக சேமிப்பது என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது ஆகும்.

மேலும் படிக்க | டிசம்பர் 31 -க்கு முன் செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் இவைதான்: மறந்தால் சிக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News