உலகம் முழுவதும் ஆட்குறைப்பு, பணிநீக்கம் சீசன் இன்னும் நின்றபாடில்லை. உலகின் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு, பணிநீக்கம் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. கூகுள், பேஸ்புக் இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட், அமேசான், டிக்டாக், டிஸ்னி நிறுவனங்களை அடுத்து தற்போது தொழில்நுட்ப நிறுவனமான யாஹூ நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் தனது ஊழியர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
1,600 பேர் பாதிக்கப்படுவார்கள்
யாஹூ நிறுவனம் தனது விளம்பர தொழில்நுட்ப பிரிவின் முக்கிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஆட்குறைபு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன்மூலம் 1,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள். அதாவது ஊடக அறிக்கைகளின் படி, Yahoo இன் விளம்பர தொழில்நுட்ப பணியாளர்களில் 50%க்கும் அதிகமானவர்களை பாதிக்கும். இதனால் 1,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள். வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Yahoo நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம், 12 சதவிகிதம் அல்லது 1,000 ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள் என்றும், மீதமுள்ள 8 சதவிகிதம் அல்லது 600 பேரை அடுத்த ஆறு மாதங்களில் நிறுவனம் பணிநீக்கம் செய்யும் என்றும் கூறப்பட்டது.
டிஸ்னி நிறுவனத்தில் ஆட்குறைப்பு
கேளிக்கை உலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற டிஸ்னி நிறுவனமும் ஊழியர்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளது. ஏழாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாக பாப் பொறுப்பேற்றார்.
ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணிநீக்கம்
அமெரிக்காவில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. கடந்த புதன்கிழமை, தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் 1300 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. திங்களன்று, டெல் 6,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தது.
டிக்டாக் நிறுவனம் பணிநீக்கம்
பைட் டான்ஸுக்குச் சொந்தமான குறும்பட வீடியோ செயலியான TikTok இந்த வார தொடக்கத்தில் தனது இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. டிக்டாக்கில் உள்ள சுமார் 40 பேருக்கு திங்களன்று அழைப்புக்குப் பிறகு பிங்க் நிற சீட்டுகள் வழங்கப்பட்டன, மேலும் அவர்களுக்கு ஒன்பது மாதங்கள் வரை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ