பான் கார்டு (PAN card) என்பது எந்த இந்தியருக்கும் அவசியமான ஆவணம். இது வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவைப்படுகிறது. எனவே வரி செலுத்துவோருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பான் கார்டு உள்ளது. பான் கார்டை (PAN card) பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பான் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இது தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால், அவருக்கு வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் ரூ .10,000 அபராதம் விதிக்கப்படலாம்.
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை தவறுதலாக இருந்தால், அவற்றில் ஒன்றை உடனடியாக ஒப்படைத்து விடுங்கள். எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் சிக்கிக்கொள்வதற்கு முன்னர் கூடுதலாக உள்ள பான் கார்டை விரைவில் சமர்பித்து விடுவது நல்லது.
ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் அதனை ஒப்படைப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.
என்.எஸ்.டி.எல் (NSDL)வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் உள்ள படிவத்தில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பான் பற்றி கார்டு எண்ணை குறிப்பிட்டு, ஒப்படைக்க விரும்பும் பான் தகவலை, படிவத்தில் உள்ள 11ம் எண் கொண்ட இடத்தில் நிரப்பவும். படிவத்துடன் ரத்து செய்யப்பட வேண்டிய பான் கார்டையும் நகலெடுக்கவும்.
சிலர் வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். டிமேட் கணக்கிற்கான தனி பான் கார்டு மற்றும் வருமான வரி தக்கல் செய்ய தனி பான் கார்டு என வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. சிலர், பழைய பான் தொலைந்து போனால், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்களிடம் ஒன்றும் மேற்பட்ட பான் கார்டுகள் உள்ளன.
டிமாட் மற்றும் வருமான வரி தாக்கலுக்கு தனித்தனி பான் கார்டு இருந்தால், பான் ஒன்றை ஒப்படைக்க வேண்டும். இந்த இரண்டிலும் நீங்கள் வருமான வரி நோக்கத்திற்காக பயன்படுத்தும் பான் கார்டை ஒப்படைக்கலாம். இரண்டாவது பான் அட்டையை ஒப்படைத்து விட்டு, நீங்கள் தொடர விரும்பும் பான் கார்டு தொடர்பான தகவலை அவர்களுக்கு அனுப்புங்கள்.
மேலும் படிக்க | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!
அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அடையாளம் காண்பதும், பண பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுப்பதும் தான் பான் கார்டின் முதன்மை நோக்கமாகும்.
பான் கார்டை (PAN card) பெறுவதற்கு, மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட பான் ஏஜென்சிக்கு சமர்ப்பிப்பதன் மூலம் அல்லது என்.எஸ்.டி.எல் (NSDL website), யு.டி.ஐ (UTI) வலைத்தளம் ஆகியவை மூலம், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம், ஐடி சான்று, பிறந்த தேதி மற்றும் கட்டணம் ஆகியவற்றுடன் ஆன்லைனில் தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் ஒருவர் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் அட்டை பெற சுமார் 10-15 நாட்கள் ஆகும்.
மேலும் படிக்க | கடன் தவணை சலுகை முடிஞ்சுதுன்னு கவலை படாதீங்க... சமாளிக்க இப்படியும் வழி இருக்கு..!!