வயதானவர்களை காதலிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே!

தன்னை விட வயதான ஒரு நபருடன் டேட்டிங் செய்வதும், காதல் செய்வதும் பல நன்மைகளை கொடுக்குமாம்! காதல் எப்போது வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் வரலாம். உங்களை விட வயதானவர் மீது காதல் பூக்கிறதா? அதில் பல நன்மைகளும் இருக்கிறது.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 29, 2020, 12:24 AM IST
வயதானவர்களை காதலிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே!

புதுடெல்லி: தன்னைவிட வயதான ஆனால் அம்சமான ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு ஈர்ப்பு வருஅது சகஜம் என்கிரது ஒரு ஆராய்ச்சி. 2010 ஆம் ஆண்டில், ஸ்காட்டிஷ் உளவியலாளர்கள் 'பரிணாம உளவியல்' என்ற ஆன்லைன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வயதான ஆண்களின் நல்ல தோற்றம் சிறுமிகளை ஈர்க்கிறது, அவர்களின் நிதி நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறது. 

 குறிப்பாக பெண் பொருளாதார ரீதியாக சுயாதீனமாக இருக்கும்போது இந்த காதல் அம்பு அதிகம் வேலை செய்கிறது.  எனவே உங்களை விட வயதான ஒருவர் மீது உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்தால்,அது குறித்து பயப்பட வேண்டாம். அதில் பல நன்மைகளும் இருக்கிறது.

ஒரு வயதான நபர் மிகவும் இளம் பெண்ணுடன் காதல் கொண்டால், அவரது மனதில் அர்ப்பணிப்பு பற்றி அதிக சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. 
இளைஞர்களுக்கு தங்கள் கடமைகளைப் பற்றி அச்சம் ஏற்படும். ஆனால், சற்று அனுபவம் கூடியவர்கள் கடமையைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த உறவு எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் தெளிவுபடுத்துகிறார்கள்.

தோற்றத்தின் எளிமை
தங்களின் தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டும் ஆடம்பரப் பிரியர்களை விட்டுவிடுங்கள். தங்கள் வயதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் ஆண்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அவர்கள் தங்கள், தகுதி மற்றும் உடல் தகுதியைப் பர்றி தெளிவாக இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை பெண்களை அவர்களை நோக்கி ஈர்க்கிறது.

பொருளாதார ரீதியாக நிலைத்தன்மை

சற்றே வயதானவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை பார்த்திருப்பார்கள். எனவே வெளிப்படையாக, அவர்கள் நிதி ரீதியாக சுயாதீனமானவர்களாக இருப்பார்கள். எனவே, தம்பதிகளிடையே பணத்துக்காக சண்டைகள் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு மிக மிகக்குறைவு.

முதிர்ச்சியே அடிப்படை
அண்களை விட பெண்கள் முதிர்ச்சியுள்ளவர்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணை, உங்களை விட வயதானவராக இருந்தால், அவருடைய முதிர்ச்சி நிலை உங்களுக்கு பொருந்தும். உங்கள் இருவருக்கும்  வாழ்க்கை நன்றாக வசப்படும்.

மிகவும் முக்கியமான நன்மை
வயதானவர்களுக்கு எல்லா விதங்களிலும் அனுபவம் இருக்கும். அது காதல் அனுபவம் மட்டுமல்ல, காம அனுபவமும் அதிகமாக இருக்கும்.  தங்கள் பழைய அனுபவங்களின் அடிப்படையில் என்ன செய்யலாம், எது தேவையில்லை, எது சரி, எது தவறு என காதலியை சந்தோஷப்படுத்துவதில் கைதேர்ந்தவராக இருப்பார், அந்த விஷயத்தில் அனுபவமும், நம்பிக்கையும் அதிகம் உள்ளவராக இருப்பார். இது அவர்களின் செயல்திறனிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வயதான ஆண்களை, ‘master the Art of Love Making’ என்றே சொல்லலாம்.  

பழைய தவறுகளை மீண்டும் செய்ய மாட்டர்

வயதான நபருக்கு நிறைய அனுபவம் இருக்கும். அவர்கள் முந்தைய உறவுகளிலிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருப்பார்கள். அதை என்றென்றும் மறக்க மாட்டார்கள். தங்களுடைய தவறால், தங்கள் துணைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். காதலியை அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். எனவே இருவருக்கும் இடையிலான உறவு வலுவாகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு..

More Stories

Trending News