Astrology, 08 March 2021: இன்றைய நாள் உங்கள் ராசிகள் சொல்லும் பலன்கள் என்ன?

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நாளும், கோளும் என்ன சொல்கின்றன? தெரிந்து, அறிந்து செயல்பட்டு, வளமோடு வாழ்வோம்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 8, 2021, 05:43 AM IST
Astrology, 08 March 2021: இன்றைய நாள் உங்கள் ராசிகள் சொல்லும் பலன்கள் என்ன? 	 title=

புதுடெல்லி: இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நாளும், கோளும் என்ன சொல்கின்றன? தெரிந்து, அறிந்து செயல்பட்டு, வளமோடு வாழ்வோம்...

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலருக்கு உதவிக்கரமான செயல்களை செய்வீர்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் ஏற்படும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும்.உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மகிழ்ச்சி பெருகும் நாள்.

கடகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன், செயல்படுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

Also Read | சந்திராஷ்டமம் என்றால் என்ன? - அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில்  அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நல்ல மாற்றங்கள் உண்டாகும் நாள்.

Also Read | பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்?

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார் தான். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

மீனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

Also Read | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News