Astrology, 09 March 2021: இன்றைய நாள் உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது?

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நாளும், கோளும் என்ன சொல்கின்றன? தெரிந்து, அறிந்து செயல்பட்டு, வளமோடு வாழ்வோம்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2021, 05:40 AM IST
Astrology, 09 March 2021: இன்றைய நாள் உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது? title=

புதுடெல்லி: இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நாளும், கோளும் என்ன சொல்கின்றன? தெரிந்து, அறிந்து செயல்பட்டு, வளமோடு வாழ்வோம்...

மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்து கொடுத்து போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.

கடகம்: பேச்சால் பல பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம்கிட்டும் நாள்.

Also Read | சந்திராஷ்டமம் என்றால் என்ன? - அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. கனவு பலிதமாகும் நாள்.

கன்னி: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் விவாதம் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். போராடி வெல்லும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:  கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

Also Read | பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்?

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள் வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில்  ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டிவரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில்  அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். மதிப்பு கூடும் நாள்.

மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

Also Read | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News