திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகம் காரணமாக பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்பதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக திருமலையின் நான்கு மாடவீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 11-ஆம் நாள் துவங்கியது. அன்று துவங்கி இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், நடைபாதை தரிசனம், விஐபி தரிசனம் உள்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து தரிசனங்களும் வழக்கம் போல் தொடங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.