கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் நோக்கம் என்ன?

இறைவழிபாடுகளில் ஒன்றான கூட்டுப் பிராத்தனை செய்வதன் நோக்கம் என்ன என்பது உங்களுக்கு தொரியுமா!

Last Updated : Mar 26, 2018, 05:45 PM IST
கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் நோக்கம் என்ன? title=

இறைவழிபாடுகளில் ஒன்றான கூட்டுப் பிராத்தனை செய்வதன் நோக்கம் என்ன என்பது உங்களுக்கு தொரியுமா!

கிராம்பபுரங்களில், அதிலும் விழா நாட்களில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி ஒன்றாக இணைந்து தங்களது குலதெய்வ கோவிலுக்கு செல்வதினை நாம் பார்த்திருப்போம். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி தெரியுமா.

கூட்டுப் பிராத்தனைக்கு என்றுமே மகத்துவம் அதிகம். எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே பலனை எதிர்பார்த்து பிரார்த்தனை செய்யும்போது நிச்சயமாக அதற்குப் கிடைக்கும் பலனின் பலமும் அதிகம் என்பார்கள்.

உதாரணமாக, பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் ஏதேனும் பிரச்சணைகளை சந்திக்கையில் கூட்டமாக ஒன்றினைந்து தங்கள் போராட்டத்தின் மூலம் பிரச்சணைகளில் இருந்து மீளுவதை நாம் பார்த்திருக்கின்றோம். இது எதார்த்தமான விடயம். இதே நம்பிக்கையே இறைவழிப்பாட்டிலும் கூட்டு பிராத்தனை மூலம் கையாளப்படுகிறது. 

பலரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த மனதோடு பிரார்த்தனை செய்கையில் மனிதர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படாத என்ன? 

கோவில்கள் என்பது மன கஷ்டத்தில் இருக்கும் மக்கள் கூடி பேசி தங்கள் பிரச்சணைகளுக்கு தீர்வு காணும் இடமாகவே முன்பு பாவிக்கப்பட்டது, கூடி பேசும் இடத்தில் தனியாக உட்கார்ந்து சிந்தித்தால் முடிவு பிறக்குமா?. இதனால் தான் ஊருக்கு ஊர் கோவில்கள் முலைத்தன.  மனிதர்களின் பிரச்சணைகளை மக்களுக்குள் மக்களாக பேசி தீர்வு காண்பதே கூட்டு வழிபாடு. காலப் போக்கில் இந்த முறையும் மாறிவிட்டது. வழக்கங்களும் மறைந்துவிட்டது...

Trending News