CBSE பொது தேர்வு 2021, JEE 2021, NEET 2021 குறித்த கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு வெபினாரில் உரையாற்றிய கல்வி அமைச்சர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2021, 06:07 PM IST
  • நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கல்வி அமைச்சர் உரையாற்றினார்.
  • கோவிட் -19 காரணமாக இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு நன்றாக அறிந்துள்ளது என குறிப்பிட்டார்.
CBSE பொது தேர்வு 2021, JEE 2021, NEET 2021 குறித்த கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பு title=

சிபிஎஸ்இ 10, 12  பொது தேர்வுகள் 2021, நீட் 2021 மற்றும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்  திங்கள்கிழமை (ஜனவரி 18) நடத்திய வெப்மினாரில், கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு முக்கியமான தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள், 2020 பாடத்திட்டத்தின் படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும் என்று கூறினார்.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு வெபினாரில் உரையாற்றிய கல்வி அமைச்சர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

"மாணவர்கள் தங்கள் சிபிஎஸ்இ (CBSE) போர்டு தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் 2021 அடிப்படையிலான பொறியியல் நுழைவுத் தேர்வு (JEE 2021) மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (NEET) போன்ற பிற தேர்வுகளுக்காக தயார் செய்ய, பாடத்திட்டங்களை குறைத்து, திருத்தப்பட்ட பாடங்களை மட்டும் படித்தால் போதும். அந்த பகுதியிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும், ”என்றார்.

அமைச்சர் போக்ரியலுடன் வெபினாரின் போது மாணவர்கள் எழுப்பிய முக்கிய கோரிக்கைகள்:

1. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ஆன்லைனில் நடத்துதல்

கல்வி அமைச்சர் இதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும், கோவிட் -19 (COVID-19) காரணமாக இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு நன்றாக அறிந்துள்ளது என்றும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறுவதற்கான காரணம் இது தான் என்றும் கூறினார்.

2. JEE Main, NEET 2021 ஐ ஒத்திவைக்கவும்

2021 ஆம் ஆண்டில் இந்த போட்டித் தேர்வுகளை ஒத்திவைப்பது எளிதல்ல என்று அமைச்சர் கூறினார், ஆனால் நீட் 2021 மற்றும் ஜேஇஇ 2021 தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும் என்று கூறினார்.

3. ஆஃப்லைன் வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் பள்ளி

பள்ளியில் வர முடியாத  மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒரு விருப்பமாக இருக்கும் என்று போக்ரியால் கூறினார்.

ALSO READ | டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News