தேசிய நிறுவன தரவரிசை (NIRF) பட்டியலில் IIT-மெட்ராஸுக்கு முதலிடம்...

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்த, 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை IIT-மெட்ராஸை இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியாகவும், IIM-அகமதாபாத் இந்தியாவின் சிறந்த தொழில் பள்ளியாகவும் பட்டியலிட்டுள்ளது.

Last Updated : Jun 11, 2020, 06:06 PM IST
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டு தரவரிசையில் முதல் மூன்று நிறுவனங்களாக IIT-மெட்ராஸ், IISC பெங்களூர் மற்றும் IIT-டெல்லி இடம் பெற்றுள்ளன.
  • தொழிற்பள்ளி தரவரிசையில், IIM-அகமதாபாத் முதலிடத்திலும், IIM-பெங்களூர் மற்றும் IIM-கல்கத்தா இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்திலும் அமைச்சு தரவரிசைப்படி உள்ளன.
  • மருந்தியல் பிரிவில், டெல்லியில் ஜாமியா ஹம்டார்ட் முதலிடத்திலும் தொடர்ந்து சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது. மொஹாலியின் தேசிய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தேசிய நிறுவன தரவரிசை (NIRF) பட்டியலில் IIT-மெட்ராஸுக்கு முதலிடம்... title=

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்த, 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை IIT-மெட்ராஸை இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியாகவும், IIM-அகமதாபாத் இந்தியாவின் சிறந்த தொழில் பள்ளியாகவும் பட்டியலிட்டுள்ளது.

இந்தியா தரவரிசை 2020 (NIRF) மின் வெளியீட்டில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், TIME அல்லது QS  தரவரிசைகளை விமர்சித்தார். "எங்கள் மாணவர்கள் சிறந்த நிறுவனங்களில் COO மற்றும் நிறுவனங்கள் உலகளவில் சிறந்த நிறுவனங்களுடன் ஒத்துழைத்துள்ளன." எனவும் குறிப்பிட்டார்.

10-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு...

இந்த பட்டியலில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டு தரவரிசையில் முதல் மூன்று நிறுவனங்களாக IIT-மெட்ராஸ், IISC பெங்களூர் மற்றும் IIT-டெல்லி இடம் பெற்றுள்ளன.

தொழிற்பள்ளி தரவரிசையில், IIM-அகமதாபாத் முதலிடத்திலும், IIM-பெங்களூர் மற்றும் IIM-கல்கத்தா இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்திலும் அமைச்சு தரவரிசைப்படி உள்ளன.

மருந்தியல் பிரிவில், டெல்லியில் ஜாமியா ஹம்டார்ட் முதலிடத்திலும் தொடர்ந்து சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது. மொஹாலியின் தேசிய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மருத்துவக் கல்லூரி பிரிவில், AIIMS டெல்லி முதலிடத்தையும், PGI சண்டிகர் மற்றும் வேலூர் CMC அடுத்த இடங்களை பிடித்துள்ளது.

Covid-19: மருந்தாளருக்கு கொரோனா; விடுதியை விட்டு வெளியேற மாணவர்களுக்கு JNU அறிவுரை...

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டு தரவரிசையில் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் IISC பெங்களூர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) ஆகியவை இடம்பிடித்துள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில், மிராண்டா ஹவுஸ் நாட்டின் சிறந்த கல்லூரியாகவும், SSR செயின்ட் ஸ்டீபன்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

Trending News