டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியாகும் தேதி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 8, 2022, 06:46 AM IST
  • டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
  • எதிர்பார்க்கப்படும் கட் ஆப் விவரங்கள் இதுதான்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியாகும் தேதி title=

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. 7,138 குரூப் 4 பதவிகளுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் பங்கேற்று எழுதினர். பாடத்திட்டம் மாற்றத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் டிஎன்பிஸ்சி தேர்வு. அதாவது, அங்கிலம் பாடத்திட்டம் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் மொழிப் பாடம் மற்றும் பொது அறிவு, கணக்கு உள்ளிட்ட பாடத்திட்டங்களைக் கொண்டு தேர்வு நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | TNPSC Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்

பொது அறிவு பிரிவில் 100 கேள்விகளுக்கும், தமிழ் பாடப்பிரிவு நூறு கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தது. வழக்கம்போல் தமிழ் மொழிப் பாடம் எளிமையாக இருந்தது. கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பொது அறிவு கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. தேர்வை எழுதிய பிறகு பேசிய தேர்வர்கள், அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததால், தேர்வு மிக கடினமாக இருக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் தேர்வு மிக மிக எளிமையாக இருந்தது. குறிப்பாக தமிழிலும், கணிதமும் எளிதில் விடையளிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்தனர். 

இந்நிலையில் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த தேர்வர்களுக்கு, டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவித்தது. அதன்படி, டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கட் ஆப் எவ்வளவு இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொணடிருக்கின்றனர். கடந்த ஆண்டு மற்றும் முந்தைய தேர்வுகளின் கட் ஆப் மதிப்பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பிருந்தாலும், பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்றே தெரிகிறது. 

மேலும் படிக்க | TNPSC குரூப் 4 தேர்வில் எதிர்பார்க்கப்படும் கட் ஆப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News