புதுடெல்லி: COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை செயல்முறை கடந்த ஆண்டு நடைமுறையின் படியே இந்த கல்வியாண்டிலும் தொடரலாம் என்று அறிவித்துள்ளது.
அதாவது 2021-22 கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வு (CUCET)ஐ நடத்த வேண்டாம். 2022-23 கல்வி ஆண்டில் இருந்து நுழைவுத் தேர்வு நடத்தினால் போதும்.
In view of prevailing COVID-19 pandemic, admission process in Central Universities during Acad Session 2021-22, may continue as per past practice.
Central Universities Common Entrance Test (CUCET) may be implemented from Acad Session 2022-23. @dpradhanbjp @EduMinOfIndia @PIBHRD— UGC INDIA (@ugc_india) July 18, 2021
2010ஆம் ஆண்டு முதல் ஏழு மத்திய பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கைகள் CUCET நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இதில் 41 இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் 1,500 இடங்கள் நிரப்பட்டுகிறது.
CUCET நுழைவுத் தேர்வில் அனைத்து வினாத்தாள்களும் வெவ்வேறு பகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்ட MCQ அடிப்படையிலானவை.
Also Read | NEET 2021 Exam Registration: நீட் 2021 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முன்னதாக, 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்லூரி சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிந்துவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் (University Grants Commission) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்த ஆண்டு கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் முதல் நாளில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, இந்த ஆண்டிற்கான கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ஆகஸ்ட் 31, 2021க்குள் முடிக்க வேண்டும். புதிய கல்வி அமர்வு அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கும்.
ஜூலை 16, 2021 தேதியிட்ட உச்ச நீதிமன்ற சுற்றறிக்கையின் படி, அனைத்து மாநில வாரியங்கள் மற்றும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகியவற்றின் முடிவுகள் 2021 ஜூலை 31க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை யூஜிசி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1, 2021 முதல் தொடங்கிவிடும்.
Also Read | Good News on NEET 2021: நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR