ஒவ்வொரு வாரமும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாமக்கல்லில் கூடி முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த கூட்டமானது நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்முட்டை உற்பத்தி உட்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. பின்னர் முட்டைக்குப் புதிய விலை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி,
முட்டை விலை 55 காசுகள் உயர்ந்து 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முட்டை ஒன்றின் கொள்முதல் விலை, 3 ரூபாய் 95 காசுகளில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.