Telangana Assembly Election Results 2023 Updates: தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த டிச. 30ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ராஷ்டிரிய சமிதி, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், மாநிலத்தில் இரட்டை இலக்க தொகுதிகளை குறிவைத்து களமிறங்கிய பாஜக மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னணியில் உள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலங்கு தேசம் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளது.
இந்த மாநிலம் தோன்றியதில் இருந்து ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை தக்கவைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லையெனில், மாநிலத்தில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்குமா என்ற கேள்வியும் உள்ளது. இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த உடனடி தகவல்களை இங்கு அறிந்துகொள்ளுங்கள்.