கர்நாடகா இடைத்தேர்தலில் கிளர்ச்சி MLA-க்களை களமிறக்கும் BJP!

எதிர்வரும் டிசம்பர் 5 கர்நாடக இடைத்தேர்தலுக்கு, பாரதிய ஜனதா (பாஜக) 13 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. 

Updated: Nov 14, 2019, 07:07 PM IST
கர்நாடகா இடைத்தேர்தலில் கிளர்ச்சி MLA-க்களை களமிறக்கும் BJP!
Representational Image

எதிர்வரும் டிசம்பர் 5 கர்நாடக இடைத்தேர்தலுக்கு, பாரதிய ஜனதா (பாஜக) 13 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. 

குறித்த MLA-க்களின் தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. காரணம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் வரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வேட்பாளர்கள் பாஜக-வில் இருந்து போட்டியிடுகின்றனர்.

வெளியாகியுள்ள பாஜக வேட்பாளர் பட்டியலின் படி 1. அதானி தொகுதியில் இருந்து மகேஷ் குமட்டள்ளி களமிறக்கப்பட்டுள்ளார். 2. காக்வாட்டைச் சேர்ந்த சிமந்தகவுடா; 3. கோகாக்கைச் சேர்ந்த ரமேஷ் ஜராகிஹோலி; 4. யெல்லாப்பூரைச் சேர்ந்த சிவரம் ஹெப்பர்; 5. ஹைரேகூரிலிருந்து BC பாட்டீல்; 6. விஜயநகரத்தைச் சேர்ந்த ஆனந்த் சிங்; 7. சிக்கபல்லாபூரைச் சேர்ந்த கே சுதாகர்; 8. கே.ஆர் பூராவைச் சேர்ந்த பைரதி பசவராஜ்; 9. யேஷ்வநாத்பூரைச் சேர்ந்த எஸ்.டி.சோம்சேகர்; 10. மகாலஷ்மி தளவமைப்பைச் சேர்ந்த கே கோபாலையா; 11. ஹோசகோட்டிலிருந்து எம்டிபி நாகராஜ்; 12. கிருஷ்ணராஜ்பேட்டைச் சேர்ந்த கே.சி.நாராயணகோவாடா; 13. ஹுன்சூரிலிருந்து எச் விஸ்வநாத்; மற்றும் சிவாஜிநகரைச் சேர்ந்த எம்.சரவணா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் சிவாஜிநகர் வேட்பாளரை பாஜக குறிப்பிட்டுள்ளதால்., ரோஷன் பேக்கை கட்சி மட்டம் ஒதுக்கியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. சட்டசபையில் இருந்து ராஜினாமா செய்த தகுதியற்ற MLA-க்களில் பேக் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ்-JD(S) முகாமில் இருந்து இந்த 13 MLA-க்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், காங்கிரஸ்-JD(S)  கிளர்ச்சி MLA-க்களில் 17 பேரில் 15 பேர் பெங்களூரில் முதலமைச்சர் BS எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 MLA-க்களில், MDB நாகராஜ் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக உள்ளார், ரோஷன் பேக் பாஜகவில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக புதன் அன்று, கர்நாடக சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாரின்,  17 கிளர்ச்சி காங்கிரஸ்-JD(S) MLA-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 2023-ஆம் ஆண்டில் முடிவடையும் தற்போதைய சட்டசபையின் காலத்திற்கு தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தடை விதித்திருந்தார்.

அதிருப்தி அடைந்த MLA-க்கள் தங்களது தகுதிநீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினர். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது கிளர்ச்சி MLA-க்கள் தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநிதீமன்றம் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் இடைத்தேர்தலில் தகுகி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் பாஜக சார்பில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.