மேற்கவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின் நிலவி வரும் பதற்ற நிலயை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை கொண்டுவருமாறு பாஜக வலியுறுத்தியுள்ளது!
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை என 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைப்பெற்றது.
மேற்கு வங்க மாநிலத்தை பொருத்தவரையில் மம்தா தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கும் இடையேயான போட்டி என இருமுனை போட்டி நிலவியது. தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்தகணிப்பின் படி பாஜக 18-லிருந்து 26 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனவும், மம்தா தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் 13-லிருந்து 21 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் ஒருபுறம் இருக்க, தேர்தலின் போது ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது வரையிலும் மாநிலத்தில் அடங்கவில்லை. கலவரத்தினால் தடைப்பட்ட கொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி எண் 200-ல் இன்று மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.
தேர்தல் பதற்றம் இன்றளவும் இம்மாநிலத்தில் குறையாத நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுகள்ளது. தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் மேலும் பதற்ற நிலையை உண்டாக்கலாம் என கருத்தில் கொண்டு பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை இறக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஆளுநர் திருப்பதி அவர்களையும் பாஜக குழு சந்தித்து கோரிக்கை கடிதத்தை அளித்துள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் இந்த குழுவிற்கு தலைமேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரை சந்தித்தப்பின் திலிப் கோஷ் தெரிவிக்கையில்., மேற்கு வங்கத்தில் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதே திரினாமுல் காங்கிரஸின் குறிகோளாக உள்ளது, ஆனால் பாஜக-வின் குறிக்கோள் தேர்தல் முடிவின் போது ஏற்படவுள்ள கலவரங்களை கட்டுப்படுத்தி மக்களை பாதுக்காக்க வேண்டும் என்பது தான் எனவும் தெரிவித்துள்ளார்.