இன்று முதல் தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக 2000 ரூபாய் கிடைக்கும். தமிழக தேர்தலின்போது, பல்வேறு கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.
திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கிய இடம் பெற்றிருந்தது.
தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றத் தொடங்கிவிட்டார்.
Also Read | இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன?
அதில் ஒரு பகுதியாக, ரேஷன் அட்டை ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை, 2021 மே 10) தொடங்கி வைக்கிறார்.
Also Read | Puducherry முதலமைச்சர் ரங்கசாமி க்கு கொரோனா பாதிப்பு உறுதி
நிவாரண நிதி நான்காயிரத்தில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் இந்த மாதம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அறிவித்தபடி கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். இம்மாதம் 15-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவும் நிலையில், கொரோனா நிவாரண நிதியை வாங்க வரும் மக்கள், கொரோனாவை தொற்ற வைத்துவிடும் அபாயமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்ட உணவுத் துறை அதிகாரிகள் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்கும் திட்டத்தை வகுத்துள்ளனர்.
Also Read | தனது முதல் டிவிட்டர் பதிவில் தமிழக முதலமைச்சரை வாழ்த்திய இயக்குநர் பாலா!
அதன்படி, வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி, அதன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு இரண்டாயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உகந்த திட்டத்தின்படி, இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணியும் தொடங்கும். இன்று முதல் 3 நாட்கள், ரேசன் கடை பணியாளர்களே ரேசன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்குவார்கள்.
வழங்கப்படும் டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
Also Read | காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடைபெற்றன - இஸ்ரேலிய ராணுவம்
இந்த டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 12-ந்தேதி வரை நடைபெறும் இம்மாதம் 15-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டோக்கன் அடிப்படையில் இரண்டாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் செயல்பட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு வரும் அனைவரும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Also Read | ஆவின் பால் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது ஏன்?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR