தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை -EC!

வரவிருக்கும் தேர்தலின் போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

Last Updated : Oct 15, 2019, 12:25 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை -EC! title=

வரவிருக்கும் தேர்தலின் போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாளான அக்டோபர் 21-ஆம் நாள் காலை 7 மணி துவங்கி மாலை 6.30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும், 17 மாநிலங்களில் உள்ள 51 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மகாராஷ்டிராவின் சதாரா மற்றும் பீகாரில் சமஸ்திபூர் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகள் ஆகிய தேர்தலுக்கும் இது பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தேர்தல் போக்கினை மாற்றிவிடலாம் என கூறி இந்த தடை அமலுக்கு கொண்டு வரப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு விரிவான அறிக்கையில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து குறிப்பிடுகையில்., "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126A-ன் விதிகளின் படி (சுருக்கமாக RP Act, 1951), எந்தவொரு தேர்தல் பிந்தைய கருத்துகணிப்பு மற்றும் வெளியீட்டை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இதுபோன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவு பரப்புதல் தடை செய்யப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஷெபாலி ஷரன் கூறுகையில், "எந்தவொரு கருத்துக் கணிப்பு அல்லது வேறு எந்த கருத்துக் கணிப்பு முடிவுகளையும் உள்ளடக்கிய எந்தவொரு தேர்தல் விஷயத்தையும் எந்தவொரு மின்னணு ஊடகத்திலும் காண்பிப்பது தடைசெய்யப்படும். 48 மணி நேரத்திற்குள் முடிவடையும் மேற்கண்ட பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வெளியாகும் கணிப்புகள் அந்தந்த வாக்குப்பதிவுகளின் திசையை மாற்றியமைக்கலாம் என கருதப்படுகிறது." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News