Gujarat First phase Vidhan Sabha Chunav 2022 Live Updates: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் காலை 11 மணி நிலவரப்படி 11.75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டு கட்டங்களாக நடைபெறும் குஜராத் சட்டசபை தேர்தலில் புதிய அரசு அமைய மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். பல தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் வர முயற்சிக்கும். அதே வேளையில், பாஜக தனது கோட்டையை தக்கவைத்துக்கொள்வதில் நோக்கமாக உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்ற பிறகு தனது எல்லையை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. மும்முனைப் போட்டி களமாக உள்ள குஜராத்தில் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெறவுள்ளது.
14,382 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். மொத்தமுள்ள 788 வேட்பாளர்களில், 70 பேர் பெண்கள், பாஜக சார்பில் 9 பேர், காங்கிரஸால் 6 பேர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியால் 5 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் (Congress) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தவிர, பகுஜன் சமாஜ் கட்சி (BSP), சமாஜ்வாதி கட்சி (SP), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் (CPI-M) மற்றும் பாரதிய பழங்குடியினர் ககட்சி (BTP) என 36 அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகளும் பல்வேறு இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.