தேர்தல் முடிவுகள் குறித்த நேரலையில் சன்னி லியோன் முன்னிலையில் உள்ளதாக உளறிய பிரபல ஊடகவியலாளர் அர்னாப்.
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குல்பர்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் மற்றும் மத்திய அமைச்சர் மானேகா காந்தி சுல்தான்பூரி தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பீகார் பேகுசராய் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவரான கிரிராஜ் சிங் முன்னிலை வகிக்கிறார். அதே தொகுதியில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட கண்ணையா குமார் பின்னடைவு சந்தித்து வருகிறார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோல் குருதாஸ் பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
மேலும் உ.பி.யில் உள்ள வாரணாசியில் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பிரதமர் மோடி முன்னிலை பெற்று வருகிறார். அதேபோல பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஜராத் காந்திநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். டெல்லியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 23,215 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலில் 30 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் தேர்தல் முடிவுகள் குறித்த நேரலை ஒளிபரப்பில் சன்னி லியோன் 7500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக ஒரு குண்டை வீசினார் பிரபல ஊடகவியலாளர் அர்னாப். அதாவது சன்னி தியோல் என்று சொல்வதற்குப் பதிலாக சன்னி லியோன் என்று தவறாகக் கூறிவிட்டார்.
சன்னி லியோன், பிரபல பாலிவுட் நடிகை என்பதால் அர்னாப் செய்த இந்தத் தவறு உடனடியாக அதிகக் கவனம் பெற்றதுடன் டிவிட்டரில் சன்னி லியோன் என்ற வார்த்தை டிரெண்ட் ஆகி வருகிறது.
Arnab is so excited today he goofed up Sunny Deol as Sunny Leone #Verdict2019 #ElectionResults2019 pic.twitter.com/SBDt1DEDoE
— Sir Jadeja fan (@SirJadeja) May 23, 2019
Leading by How many votes ???? ;)
— Sunny Leone (@SunnyLeone) May 23, 2019