மீண்டும் மோடி.....அடுத்த கட்ட நடவடிக்கைகாக டெல்லி செல்லும் மாயாவதி

Last Updated : May 23, 2019, 12:31 PM IST
மீண்டும் மோடி.....அடுத்த கட்ட நடவடிக்கைகாக டெல்லி செல்லும் மாயாவதி title=

குஜன் சமாஜ் தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன! 

நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. மிகப்பெரிய மாநிலமான அங்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் யார் முன்னிலை பெறுகிறார்களோ அவர்கள் மத்தியில் அமையப்போகும் ஆட்சிக்கு பெரும் பங்கு வகிப்பர். எனவே அங்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அமேதி, ரேபரேலி தொகுதியை தவிர மீதமுள்ள 78 தொகுதிகள் மகாகத்பந்தன் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு கடந்த 2014 தேர்தலில் பாஜக 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் அங்கு பாஜக 58 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மகாகத்பந்தன் கூட்டணி 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது, இதேபோல் காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் நாடு முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 328 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில் தங்கள் அணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க மாயாவதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending News