இளைஞர்கள் அதிகம் மதுவை நாடுவது ஏன் -காரணம் உள்ளே!

இளம் வயதினர் குடிபழக்கத்திற்கு இவ்வளவு அடிமையாக அப்பாடி என்ன தான் காரணம் என்றால் அதற்க்கு 4 வகையான காரணங்களை கண்டறிந்துள்ளனர்.

Last Updated : Apr 9, 2018, 06:10 PM IST
இளைஞர்கள் அதிகம் மதுவை நாடுவது ஏன் -காரணம் உள்ளே! title=

இளம் வயதினர் குடிபழக்கத்திற்கு இவ்வளவு அடிமையாக அப்பாடி என்ன தான் காரணம் என்றால் அதற்க்கு 4 வகையான காரணங்களை கண்டறிந்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடையே மது அருந்துதல் என்பது நாகரிகமாக மாறி வருகிறது. 

இந்த கால இளைஞர்கள் மது அருந்தவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் நம்மை மதிக்கமாட்டார்கள் என நினைப்பில் பலர் மது பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர்.நாம் அனைவரும் நினைப்போம், இவர்கள் மது அருந்துவதற்கு என்னதான் காரணமாக இருக்கும் என்று, ஆனால் நமக்கு பதில் ஈப்போதும் கிடைப்பதில்லை. நம்மிடம் விடை கிடைக்காத பல கேள்விகள் இருக்கும் அதில் ஒன்று இந்த கேள்வியும். 

இளைஞர்கள் மது அருந்துவதற்கு என்ன அப்பாடி தான் காரணமாக இருக்கும் என தற்போது ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் பொதுவாக இளம் வயதினரே  அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்கிறார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சரி, இளம் வயதினர் குடிபழக்கத்திற்கு இவ்வளவு அடிமையாக அப்பாடி என்ன தான் காரணம் என ஆராய்ந்துள்ளனர். இவர்களின் ஆராய்சியில் 4 வகையான காரணங்களை கண்டுபிடித்துள்ளனர். 

முதல் காரணம்: தனது ஓய்வு நேரத்தை ஜாலியாக கழிப்பதற்காக மதுவை நாடுகின்றனர். பின்னர் அந்த பழக்கமே நிறுத்த முடியாத தொடர் கதையாக மாறுவதாக கண்டறிந்துள்ளனர்.

இரண்டாவாது காரணம்: தவறு செய்துவிட்டு, அதை, தானே செய்தேன் என ஒத்துக்கொள்வதற்கும் குடிக்க ஆரம்பிக்கின்றார்களாம். உண்மைகளை சொல்வதற்கு துணிவு வராத போது துணிவை வரவழைக்க மது அருந்துவதை பழக்கமாக்கி கொள்கின்றனர் இளைஞர்கள். 

மூன்றாவது கரணம்: தம்மை இந்த சமூகத்தில் பெரிய ஆளாகக்காட்டிக் கொண்டு ’கெத்து’ காண்பிப்பதற்காகவும் சில இளைஞர்கள் மதுவை தேடி செல்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.  

நான்காவது காரணம்: சில பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் சமாளிக்க முடியாமல் கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதும் மதுவிற்கு அடிமையாவதாக ஆய்வின் போது கண்டறிந்துள்ளனர்.

Trending News