8 வருட காத்திருப்புக்கு பின் அசாம் Zoo-வில் ஒட்டகச்சிவிங்கி!

அசாமின் மிருகக்காட்சிசாலையின் அழகை மேம்படுத்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கி விலங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

Last Updated : Dec 1, 2019, 09:07 PM IST
8 வருட காத்திருப்புக்கு பின் அசாம் Zoo-வில் ஒட்டகச்சிவிங்கி! title=

அசாமின் மிருகக்காட்சிசாலையின் அழகை மேம்படுத்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கி விலங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த விலங்கு பாட்னாவின் சஞ்சய் காந்தி ஜெயவிக் உதயனிடமிருந்து சனிக்கிழமை ஒரு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது இந்த ஒட்டகச்சிவிங்கி அசாமின் மிருகக்காட்சிசாலையை அலங்கரிக்கிறது. மிருகக்காட்சிசாலையில் இந்த புதிய விருந்தினரின் வருகையால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியின் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உங்கள் தகவலுக்கு, எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு ஒட்டகச்சிவிங்கி அசாம் மிருகக்காட்சிசாலையில் கொண்டு வரப்பட்டதாக பிரதேச வன அலுவலர் தேஜாஸ் மரிஸ்வாமி தெரிவித்துள்ளார். விரைவில் இந்த மிருகக்காட்சிசாலைக்கு ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கியும் வந்தடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கியை மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பரிமல் சுகாபைத்யா வரவேற்றார். நிகழ்ச்சியின் போது பேசிய அவர், பார்வையாளர்கள் இப்போது மிருகக்காட்சிசாலையின் வருகையின் போது ஒட்டகச்சிவிங்கிகளைக் காணலாம் என தெரிவித்தார்.

அசாமின் மிருகக்காட்சிசாலையில் அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன என்பதை நாம் அறிவோம். எல்லோரும் அனைத்து விதமான விலங்குகளையும் பார்க்க இங்கே குவிகிறார்கள். ஆனால் தற்போது வருகை புரிந்துள்ள இந்த விலங்கின் பிரவேசம் மிருகக்காட்சிசாலையில் அதிக உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது. எனவே இங்கு வரும் மக்களின் கூட்டமும் கனிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News