கர்நாட்டக பார்முலாவை பின்பற்ற துடிக்கும் பீகார், கோவா!

கர்நாட்டகாவில் பாஜக பயன்படுத்தியுள்ள பார்முலாவை பயன்படுத்தி தங்களை ஆட்சியமைக்க அழைங்கள் என பீகார், கோவாவில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளது.

Last Updated : May 17, 2018, 06:27 PM IST
கர்நாட்டக பார்முலாவை பின்பற்ற துடிக்கும் பீகார், கோவா! title=

கர்நாட்டகாவில் பாஜக பயன்படுத்தியுள்ள பார்முலாவை பயன்படுத்தி தங்களை ஆட்சியமைக்க அழைங்கள் என பீகார், கோவாவில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளது.

நடந்து முடிந்த கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தனி கட்சி பெருன்பான்மை என்னும் பெயரில் கர்டாட்டகவில் ஆட்சி அமைத்தது. இதன் அடையாளமாக கர்நாட்டக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார், மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையை நிரூபிக்க காத்துள்ளார். 

கர்நாட்டகாவில் 104 இடங்களில் வெற்றிப்பெற்ற பாஜக ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காக 78 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸும், 38 இடங்களை பெற்றுள்ள JDS-ம் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கு உரிமை கோரின. எனினும் கர்நாட்டக ஆளுநர் எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமானம் செய்து வைத்தார்.

இதனையடுத்து பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதவராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் JDS உறுப்பினர்கள் கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இதே பார்முலாவை பயன்படுத்தி தங்களை ஆட்சியமைக்க அழைங்கள் என பீகார், கோவாவில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளது.

#கோவா...

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்திற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தேத்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்களும் பிடித்தன. இதுதவிர, மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகள் தலா 3 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றிப்பெற்றது.

கோவா-வில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 21 MLA-களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. தனிப்பெரும் கட்சி என்னும் பட்சத்தில் காங்கிரஸ் வசமே அட்சி வந்திருக்க வேண்டும். 

#பிஹார்...

பிஹாரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ்-ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. இதில் ராஷ்டீரிய ஜனதா தளம் 80, ஐக்கிய ஜனதா தளம் 71, காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

அதேவேலையில் பாஜக 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றது. இதனால் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. எனினும் இக்கூட்டணி கடந்த அண்டு ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. 

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக-வுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியது. அப்போது ஆளுநர் இக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தனிப் பெரும்பான்மையான லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதேப்போல் மணிப்பூரிலும் காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால் உதிரி கட்சிகளை கொண்டு பா.ஜனதா ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில் தற்போது கர்நாட்டகாவில் மட்டும் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றிப்பெற்றதற்கு ஆட்சியமைக்க உரிமை வழங்கியது எந்த வகையில் நியாயம் என பீகார், கோவாவில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன!

Trending News