மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!

மணல் கடத்தலுக்கு துணை நிற்கும் அரசு அதிகாரிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : May 8, 2018, 05:36 PM IST
மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்! title=

மணல் கடத்தலுக்கு துணை நிற்கும் அரசு அதிகாரிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது மணல் கடத்தல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பக கிருஷ்ணகிரி மாவட்டம் குறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து பாபு மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கக் கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தொடர்புடை அதிகாரிகள் குறித்து விவரங்களை கோரியது. அதன்படி 2010 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மணல் கடத்தலுக்கு துணை போன 18 அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள், மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இருந்தும், ஏன் இதுவரை ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியது. 

மேலும், மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கைது செய்யப்பட்டு 4 வாரங்களில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதுதொடர்பாக  அனைத்துக் காவல்நிலையங்களுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மணல் கடத்தலில் கைது செய்யப்பட்ட பாபு மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.

Trending News