அதிகாலையில் வெறும் வயிற்றில் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை, நமது செரிமான சாறுகளுடன் கலந்து நெஞ்செரிச்சல் மற்றும் பிற இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக் கூடாது. ஏனெனில், இது உடலில் அமிலத்தன்மை மற்றும் வாய்வுக்கு வழிவகுக்கிறது. தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இதனால், வயிற்றில் கற்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!
பேரிக்காய் சத்து நிறைந்த உணவுதான். ஆனால் இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இதிலுள்ள கச்சா நார்ச்சத்து, வயிற்றில் இருக்கும் மென்மையான இரைப்பை குடல் திசுக்களை சேதப்படுத்தும். முலாம்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும் காலையில், வெறும் வயிற்றில் அதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். இதை காலி வயிற்றில் சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
பேரிச்சம் பழங்களில் பிரக்டோஸ் இருப்பதால், வெறும் வயிற்றில் உண்ணும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இது வாயு மற்றும் வயிறு வீக்கத்துக்கு உங்களை அழைத்து செல்லும். காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொள்வது இரத்தத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் ஏற்றத்தாழ்வுக்கும் வழிவகுக்கும். இது இதயத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
பாதாம் பருப்பை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது பித்தத்தை அதிகரிக்கிறது. மேலும், செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. வெறும் வயிற்றில் காபியுடன் தொடங்குவது செரிமான அமைப்பில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பைத் தூண்டும், மேலும் இரைப்பை அழற்சியையும் ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | கோதுமை வேண்டாம்... ‘இந்த’ சப்பாத்திகளுக்கு மாறுங்க... வெயிட் தானா குறையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ