விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!

பொதுவாக உடலில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலோ ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2024, 06:19 AM IST
  • சில அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்.
  • பின்னாளில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • மருத்துவரை அணுகுவது நல்லது.
விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்! title=

இன்றைய சூழலில் ஒருவருடைய வாழும் வயது குறைந்து கொண்டே போகிறது. 35 வயதை தாண்டிவிட்டாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. சில நோய்கள் ஏற்பட்டால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். எனவே உடலில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. நோய்கள் உடலில் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். இத்தகைய அறிகுறிகளை புறக்கணிப்பது பெரிய ஆபத்தில் முடியும். ஏனெனில் இந்த மாற்றங்கள் உடலில் ஏற்பட்டுள்ள ஏதேனும் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக கையில் தான் சில நோய்களின் அறிகுறிகள் முதலில் ஏற்படுகிறது. எந்த எந்த நோய்களுக்கு இவ்வாறு அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்கும் இலவங்கபட்டை டீ... காலை - இரவு இரு வேளையும் குடிங்க..!!

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள்

மருத்துவர்களின் கூற்றுப்படி விரல்கள், மணிக்கட்டுகள் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்பட்டால் அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். எந்தக் காரணமும் இல்லாமல் கைகளில் வீக்கம் ஏற்படுவது, உடலில் நீர் தேங்குவதால் ஏற்படும் நீர் தேக்க நோய்களின் விளைவாக கூட இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். 

இந்த நோய்கள் இருந்தால் கையில் வீக்கம் இருக்கும்

சிறுநீரக நோய்: உடல் நீண்ட நாட்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் போது, ​​உடலில் உள்ள நீரின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது. இது எடிமாவை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் அடிக்கடி வாந்தி, குமட்டல், சோர்வு மற்றும் குறைவான சிறுநீர் கழித்தல் ஆகியவை சிறுநீரகம் பலவீனமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும். சோர்வாக உணர்ந்தால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கவில்லை என்றால், கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டால் சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம் ஆகும். சிறுநீரக நோயின் மற்றொரு சிக்கல் இரத்த சோகையை ஏற்படுத்தும்.

கல்லீரல் பாதிப்பு: கல்லீரல் பிரச்சனைகள் ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள திரவத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்கும் புரதச்சத்து உடலில் இல்லாமல் போய்விடுகிறது. இந்த காரணங்களால் கை, கால் மற்றும் வயிற்றில் தண்ணீர் தேங்குவதால் வீக்கம் ஏற்பட தொடங்குகிறது. அதே போல கல்லீரல் சேதமடையும் போது அதிகமான ​​​​வயிற்று வலி, கை மற்றும் கால்களில் அரிப்பு மற்றும் சிறுநீர் போகும் போது எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. 

இதய செயலிழப்பு: இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாவிட்டால், மற்ற உறுப்புகளில் திரவம் குவியத் தொடங்குகிறது, இதனால் இதயம் வேலை செய்வதை நிறுத்துகிறது. தமனிகளில் கொழுப்பு படிவுகள் குவிவதாலும் இந்த நோய் ஏற்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை குறைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கும். மேலும் தொடர் இருமல், சோர்வு, பலவீனம் மற்றும் விரைவான இதயத் துடிப்பு ஆகியவை இதய செயலிழப்புக்கான அறிகுறிகளாகும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News