அன்னாசி பழ நீர் நன்மைகள்: கோடை காலத்தில் பெரும்பாலும் மக்கள் அன்னாசிப்பழம் மற்றும் அதன் சாற்றை அதிகம் குடிப்பதுண்டு. ஆனால் நீங்கள் எப்போதாவது அன்னாசி தண்ணீரை குடித்ததுண்டா? அன்னாசிப்பழத்தில் இருந்து தண்ணீர் வராத போது, அன்னாசி தண்ணீரை எப்படி குடிக்க முடியும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அன்னாசி பழ தண்ணீர்
அன்னாசிப்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு விடுங்கள். பழத்துண்டுகள் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும். அதன் பிறகு, பழத்தை எடுத்து இந்த தண்ணீரை உட்கொள்ளவும். இதுவரை அன்னாசிப்பழ தண்ணீர் உட்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களும் கண்டிப்பாக அதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இதன் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
உடலை ஹைட்ரேட் செய்யும்:
நம் உடல் சரியாக செயல்பட நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம், அதனால்தான் மருத்துவர்கள் நாள் முழுவதும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கின்றனர். ஆனால் சிலருக்கு தண்ணீரின் சுவை பிடிக்காது, அவர்கள் அதை மிகக் குறைவாகவே உட்கொள்கிறார்கள். இதனால் நீரிழப்பு, சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், அன்னாசி பழ தண்ணீர் குடித்தால், தண்ணீரில் உள்ள அன்னாசிப்பழத்தின் இனிப்பு சுவை காரணமாக நீரின் ஈர்ப்பு அதிகரிக்கிறது. மேலும் அதைக் கொண்டு நீரேற்றத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
அன்னாசிப்பழம் தண்ணீர் சாதாரண தண்ணீருக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கின்றது. இந்த இனிப்பு நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அன்னாசிப்பழம் வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸின் சிறந்த மூலமாகும். இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சரியாகச் செயல்பட வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு கப் அன்னாசிப்பழத்தில் இருந்து 79 மில்லிகிராம் வைட்டமின் சி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க ஒரு ஜாலியான வழி: ஜூஸ் குடிச்சிக்கிட்டே வெயிட் குறைக்கலாம்!!
வீக்கத்தைக் குறைக்கிறது:
அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் உப்பு கலவை உள்ளது. இது என்சைம்களின் குழுவாகும். அன்னாசி தண்ணீரை தொடர்ந்து உட்கொண்டால், அது வீக்கத்தைக் குறைக்க உதவும். உண்மையில் ப்ரோமெலைன் நீரில் கரையக்கூடியது, இது உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது தவிர, சைனசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கின் வீக்கத்தையும் புரோமிலின் குறைக்கும்.
சருமத்திற்கு நன்மை பயக்கும்:
அன்னாசிப்பழம் தண்ணீர் குடிப்பதால் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும். சருமத்தில் வழுவழுப்பு வந்து உங்கள் வயதை விட இளமையாக தோற்றமளிக்கலாம். அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் காணப்படுகின்றன. இது சருமத்தின் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. அன்னாசி தண்ணீரை குடிப்பதன் மூலம், உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
செரிமான சக்தியை அதிகரிக்கிறது:
ஜீரண சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அன்னாசி தண்ணீரை குடித்தால், அது உங்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இது உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவும். அன்னாசி நீரில் ப்ரோமெலைன் என்ற நொதி காணப்படுகிறது. இது புரத செரிமானத்தை ஆதரிக்கிறது. உணவுக்கு இடையில் அன்னாசிப்பழம் தண்ணீர் குடித்தால், அது உங்கள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும்.
சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க உதவும்:
சிலருக்கு சோடா குடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சோடாவில் அதிக சர்க்கரை இருக்கிறது. அன்னாசிப்பழ தண்ணீர் உங்கள் சோடா பசியைப் பூர்த்தி செய்யும். ஆகையால் சோடா குடிக்க விரும்புபவர்கள் அன்னாசிப்பழம் தண்ணீரை குடிக்கலாம். இது உங்கள் சோடா ஏக்கத்தை நிவர்த்தி செய்ய உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பாலியல் பிரச்சனையா... ‘இவற்றை’ சாப்பிட ஒரே மாதத்தில் தீர்வு கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ