தூங்கும் முன் தலையணைக்கு கீழே பூண்டை வைத்தால் கிடைக்கும் பல நன்மைகள்: விவரம் இதோ

தூங்குவதற்கு முன் பூண்டின் சில பற்களை தலையணையின் கீழ் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். 

Written by - ZEE Bureau | Last Updated : May 18, 2021, 04:45 PM IST
  • பூண்டு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது.
  • தினமும் தலையணையின் கீழ் பூண்டு வைத்திருப்பது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • தலையணையின் கீழ் பூண்டை வைத்திருப்பது உடலில் உறக்கத்தைத் தூண்டுகிறது.
தூங்கும் முன் தலையணைக்கு கீழே பூண்டை வைத்தால் கிடைக்கும் பல நன்மைகள்: விவரம் இதோ

பூண்டு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது என்பது பலருக்குத் தெரியும். பூண்டு பல அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நம் உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் பூண்டின் இன்னும் சில நன்மைகளும் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவற்றைப் பற்றி இங்கே காணலாம். 

தூங்குவதற்கு முன் பூண்டின் சில பற்களை தலையணையின் கீழ் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். 

கொசு ஈக்கள் விலகிச் செல்கின்றன
இரவில் தூங்கும் போது சில இடங்களில் கொசுத்தொல்லை (Mosquito) அதிகமாக இருப்பதுண்டு. பூண்டை தலையணையின் கீழ் வைத்திருப்பதால் நாம் எளிதாக கொசுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். பூண்டில் இருக்கும் பல கூறுகள் கொசுக்கள் மற்றும் பல பூச்சிகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆகையால் தலையணையின் கீழ் பூண்டை வைத்துக்கொண்டால், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் அந்த வாசனையால் விலகி ஓடிவிடும். 

ALSO READ: Health News: கொத்து கொத்தாய் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொத்தமல்லி!!

தூக்கத்துக்கு நல்லது
தலையணையின் கீழ் பூண்டை வைத்திருப்பது உடலில் உறக்கத்தைத் (Sleep) தூண்டுகிறது. பூண்டில் வைட்டமின் பி 1 உள்ளது. இது மனிதர்களுக்கு நல்ல தூக்கத்தை அளிகிறது. இது தவிர, வைட்டமின் பி 6-ம் பூண்டில் உள்ளது. இது தூக்கமின்மையால் அவதுப்படுவோருக்கு அதிக நன்மை பயக்கும். பொதுவாக மனிதர்களுக்கு ஒரு நாளில் 7 மணிநேர தூக்கம் தேவை என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை பல கடுமையான நோய்களுக்கும் மன பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், தலையணையின் கீழ் பூண்டு வைத்திருப்பதன் மூலம், இந்த நோய்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்க்கலாம். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
தினமும் தலையணையின் கீழ் பூண்டு (Garlic) வைத்திருப்பது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டில் அல்லிசின் எனப்படும் ஒரு கூறு காணப்படுகிறது. இது உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. இந்த உண்மை ஆராய்ச்சியிலும் கண்டறியப்பட்டுள்ளது.

சளி இருமலை சரி செய்கிறது
மூக்கில் ஏற்படும் அடைப்பு மிகப் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், இது கவனிக்கப்படாவிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் தலையணைக்கு கீழ் பூண்டு பற்களை வைத்துக்கொண்டு தூங்கினால், பூண்டில் உள்ள அல்லிசினின் காரணமாக, மூக்கில் எந்தவிதமான தொற்றுநோயும் ஏற்படாமல் இர்க்கும். மூக்கில் உள்ள அடைப்பும் சரியாகும். 
(குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. எதையும் செய்யும் முன்னர் மருத்துவரை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.)

ALSO READ: Health News: அன்னாசிப் பழத்தின் அள்ள அள்ள குறையாத அற்புத நன்மைகள் இதோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News