Weight Loss, Papaya Fruit: உடல் எடை குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகமாகியிருக்கிறது. காரணம் உடல் பருமன் தற்போது மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, உடல் பருமனால் பல்வேறு நோய்களும் வர வாய்ப்புள்ளதால் உடல் எடையை குறைப்பதை பலரும் சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர்.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை தங்களின் அன்றாடத்தில் மிக மிக ஒழுங்காக பயன்படுத்தினால் மட்டுமே உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அந்த வகையில், உடல் எடை குறைப்பில் பழங்களை, உங்கள் சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்வதும் மிகுந்த பயனளிக்கும். அதில் பப்பாளி பழமும் உடல் எடையை குறைக்க பயன்படும். அவற்றை எவ்வாறு நமது அன்றாடத்தில் கொண்டுவந்து உணவாக உண்பது என்பதை இதில் காணலாம்.
உணவில் இப்படி சேர்த்துக்கொள்ளுங்கள்
பப்பாளியை மூன்று வேளை உணவில் எப்போது வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளளாம். காலை உணவின் போது பப்பாளியை துண்டு துண்டாக வெட்டி சாலட் வகையில் சாப்பிடலாம். இதனுடன் ஓட்ஸையும் நீங்கள் சாப்பிடலாம். மதிய பொழுதுகளில் பப்பாளி பழத்தை நீங்கள் ஜூஸ் போட்டு குடிக்கலாம். மேலும், பப்பாளி சாலட்டில் கீரை, பூண்டு, தக்காளி, எலுமிச்சை சாறு, உப்பு போட்டு சேர்த்து சாப்பிடும்போது இன்னும் சத்து மிகுந்ததாக இருக்கும்.
மாலை பொழுதுகளில் நொறுக்குத் தீனியை தவிர்க்கும்போது, பப்பாளியை சாப்பிட்டு பசியை தணிக்கும் முடியும். இதற்கு பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் கலந்து ஸ்மூத்தி போன்று செய்து அதனை குடிக்கலாம். இதனால், விரைவாக பசி எடுக்காது.
இரவில் பலரும் பழங்களை சாப்பிட மாட்டார்கள். வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், பப்பாளி பழம் இரவுக்கும் ஏற்ற பழமாகும். எனவே, பப்பாளியை இரவிலும் நீங்கள் சாப்பிடலாம்.
இந்த பழம் இரவு உணவிற்குப் பிறகு இனிப்பாக சாப்பிடும் வகையில் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை போட்ட இனிப்பில் கொழுப்பு இருக்கும், இது கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடலில் எவ்வித நச்சும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
ஏன் பப்பாளி பழம்?
பப்பாளியில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் காணப்படுகிறது. அது மட்டுமின்றி, பப்பாளியில் உள்ள பாப்பைன் என்சைம்கள் உடலுக்கு மிகவும் நன்மை என கூறப்படுகிறது. இவை அனைத்தையும் விட உடல் எடையை குறைக்கும் பண்புகள் பப்பாளியில் அதிகம் காணப்படுவதால்தான் நான்கு வேளையிலும் இதனை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
பப்பாளி மிக எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாகவும். விலை மலிவானது, ருசியும் மிக்கது. பப்பாளியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் எந்த தரப்பினரும் சாப்பிடலாம். இருப்பினும், சில மருத்துவ குறைப்பாடுகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு, அவர்கள் கூறும் அளவிற்கு ஏற்ப பப்பாளியை எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டுமே தவிர செயற்கையானதாக இருக்கக் கூடாது என்பது புரிந்துகொள்ள வேண்டும்.
விதைகள் உள்ள நாட்டு பப்பாளியையே உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். விதைகள் இல்லாததை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். பப்பாளி சூட்டைக்கிளப்பும் என்றும் கூறப்படுவதால் ஒரே நாளில் பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ