மூளை - கல்லீரலை காலி செய்யும் அலுமினியம் ஃபாயில்... இனிமே யூஸ் பண்ணாதீங்க!

Side Effects of Packing Food in Aluminium Foil:உணவுகளை பிளாஸ்டிக் கலன்களில் அல்லது பைகளில் பேக் செய்தால் ஏற்படும் பக்க விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அலுமினியம் பாயில் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் பலருக்கு தெரிவதில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2024, 07:20 PM IST
  • அலுமினியம் ஃபாயிலில் உணவை பேக் செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்.
  • அலுமினியம் தாளில் பேக் செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.
  • அலுமினியம் ஃபாயிலில் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்.
மூளை - கல்லீரலை காலி செய்யும் அலுமினியம் ஃபாயில்... இனிமே யூஸ் பண்ணாதீங்க! title=

நம்முடைய உணவு முறை தான், பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என்றால் மிகை இல்லை. நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள், நமது உடல்நலத்தை பெரிதும் பாதிக்கின்றன. இந்நிலையில் உணவை பேக் செய்ய நாம் பயன்படுத்தும் அலுமினியம் ஃபாயில், மிகவும் ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உணவு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உணவுகளை பிளாஸ்டிக் கலன்களில் அல்லது பைகளில் பேக் செய்தால் ஏற்படும் பக்க விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அலுமினியம் பாயில் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் பலருக்கு தெரிவதில்லை. ஆம்... அலுமினியம் பாயிலில் பேக் செய்யப்பட்ட உணவை உண்பதால், மூளை, கல்லீரல், சிறுநீரகம் என பலவகையில் உடலுக்கு பாதிப்பு உண்டாகலாம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அலுமினியம் ஃபாயிலில் உணவை பேக் செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அலுமினியம் கார்டில் உணவுகளை பேக் செய்யும் போது, அந்த உலோகம் சிறிதளவு உணவுடன் கரைந்து விடுகிறது. குறிப்பாக அமிலத்தன்மை மற்றும் காரமான உணவுகளை பேக் செய்யும் போது அலுமினியம் கரைந்து, அந்த உணவில் அலுமினியம் அதிக அளவு கலக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் உணவின் சுவையும், ரசாயன எதிர்வினையால் பாதிக்கப்படுகிறது.

அலுமினியம் ஃபாயிலில் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

அலுமினியம் அதிக அளவில் உடலில் சேர்ந்தால் அல்சைமர் போன்ற மூளை பாதிப்புகள் ஏற்படலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அலுமினியம் தாளில் பேக் செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. மேலும் இதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

அலுமினியம் ஃபாயிலில் பயன்படுத்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்

அலுமினியம் அதிக அளவில் வயிற்றில் சென்றால் கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். அதோடு நீண்ட நேரம் அலுமினியம் பாயில் வைத்திருக்கும் உணவுகள், சில சமயங்களில் கெட்டுப் போகும். இதனால் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | கல்லீரலை கவனமாய் பாதுகாக்க உதவும் அற்புதமான 5 உணவுகள்

அலுமினியம் ஃபாயிலில் பயன்படுத்துவதால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள்

அலுமினியம் ஃபாயிலில் பேக் செய்யப்பட்ட உணவின் மூலம் அதிக அளவு அலுமினியம் உணவின் மூலம் வயிற்றுக்குள் செல்லும்போது அது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு அலுமினியம் ஃபாயிலில் ஏற்படுத்தும் பாதிப்பு

அலுமினியம் பாயில் இருந்து உணவில் கலக்கும் அலுமினிய துகள்கள் வயிற்றை சென்றடையும் போது, சிறுநீரகங்கள் அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற முடியாமல் உடலில் குவியலாம். இது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அலுமினியம் ஃபாயில்

உடலுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர, சுற்றுச்சூழலுக்கும் அலுமினியம் காயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அலுமினியம் பாயில் தயாரிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதை தயாரிக்கும் செயல்முறை என்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாழ்வுகள் வெளியேறி மாசு படுத்துகின்றன. மேலும் பிளாஸ்டிக் பை போலவே அலுமினியம் தாள் எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News