பைபோலார் டிஸ்ஆர்டர் அதாவது இருமுனை கோளாறு என்பது ஒரு வகையான மனப் பிரச்சனையாகும். இதனால் பாதிக்கப்படும் நபர் கடுமையான மனநிலை மாற்றங்களைக் கொண்டிருப்பார். மேலும் அவரைச் சுற்றி என்ன நடக்கிறது அல்லது சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பது அவருக்கு புரியாமல் இருக்கும்.
இந்த கோளாறால் பாதிக்கப்பட்ட நபர்கள் சில சமயம் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைகிறார்கள், அல்லது வேதனை படுகிறார்கள். எனினும், மகிழ்ச்சி அடையும் தருணங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். எப்பொழுதும் தங்களைச் சுற்றி ஒருவித சங்கடத்தை உணர்கிறார்கள். ஆகையால், இந்த பிரச்சனை குறித்து விழிப்புடன் இருப்பது அவசியமாகும். இந்த கோளாறை எவ்வாறு சமாளிப்பது என்று பார்ப்போம்.
பைபோலார் கோளாறு என்றால் என்ன?
இருமுனை கோளாறு என்றும் அழைக்கப்படும் ஒரு வகையான மனநலக் கோளாறாகும். இந்த பிரச்சனை அதிகரிக்கும் போது, நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துதல், ஆசைகள் குறைதல், சோர்வு, ஆற்றல் குறைவு, எரிச்சல், எப்பொழுதும் சோகமாக இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றும்.
பைபோலார் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவுவது?
உங்கள் அருகிலோ, உங்களுக்கு தெரிந்தோ, இருமுனை கோளாறால் பாதிக்கப்பட்ட நபர் இருந்தால், சில முறைகளைப் பின்பற்றி அவருக்கு உதவலாம். அந்த முறைகள் பின்வருமாறு-
1. இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட அல்லது அனுபவப்பட்ட விஷயங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அவரது அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேச வேண்டும். இதனால் அவரது மன அழுத்தம் நீங்கி, அவர் தனது கருத்தை உங்கள் முன் வைக்கக்கூடும்.
2. பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கைகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். உதாரணமாக, இருமுனை கோளாறால் பாதிக்கப்பட்டவர் எத்தனை மணிநேரம் தூங்குகிறார், அவர் எப்போதும் சோர்வாக உணர்கிறாரா, அவரது நடத்தை மிகவும் தீவிரமானதாக உள்ளதா என இப்படிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
மேலும் படிக்க | தூங்கும் முன் மறந்து கூட இந்த 3 பொருட்களை சாப்பிடாதீர்கள்
3. அந்த நபரின் நடத்தை மிகவும் தீவிரமானதாக இருந்தால், நீங்கள் அவரை வாக்கிங் அழ்ழைத்துச்செல்லலாம், அல்லது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் ஏதாவது செய்யலாம். சில சமயங்களில் இப்படிப்பட்டவர்களின் போக்கு ஆக்ரோஷமாக இருப்பதை நீங்கள் காணலாம். ஆகையால் இவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
4. இப்படிப்படவர்களிடம் பொறுமையாக பேசுங்கள். அவர் மனதில் உள்ளதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் ஏற்கும் மனநிலையில் இருக்கும்போது, அவரிடம் பிரச்சனைக்கான தீர்வுகளைப் பற்றி பரிந்துரை செய்ய்யலாம்.
5. முறையான மருத்துவ அணுகல் இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபரை இதற்கான பிரத்யேக மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Bone Health: எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான பழக்கங்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR