கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் முறைகள்: கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த மக்கள் பலவிதமான குறிப்புகளை பின்பற்றுகிறார்கள். எனினும், பல முயற்சிகளை செய்தும், பலரால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடிவதில்லை. எனினும், இதற்காக அதிகம் கவலைப்பட தேவையில்லை. இதற்கான பல இயற்கையான எளிய வழிகளும் உள்ளன.
நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று நல்லது, மற்றொன்று கெட்டது. கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கான மிக ஆபத்தான காரணமாக உள்ளது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. இது தவிர, உடற்பயிற்சி செய்யாததாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாரத்திற்கு 3 முறை முட்டை சாப்பிடுங்கள்
முட்டை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுப்படும். இருப்பினும், பெரும்பாலான மக்கள் முட்டையின் மஞ்சள் பகுதியை சாப்பிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். உண்மையில், இதுகுறித்த பல வகையான வேறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆகையால், நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை முட்டைகளை சாப்பிடலாம். எனினும் மஞ்சள் பகுதியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.
மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும்
மீன் மூலம் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்
இது தவிர மீன் சாப்பிடுவதன் மூலமும் அதிகரித்த கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும். மீன்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் மாரடைப்பு அபாயமும் குறைகிறது.
முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் உணவில் முழு தானியங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகரித்த உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். உங்கள் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால், மாரடைப்பு அபாயத்தில் இருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம். மேலும், உங்கள் உணவில் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள மறக்கதீர்கள்.
மேலுன் படிக்க | கோடையில் திராட்சை அளிக்கும் அற்புத நன்மைகள்: பல வித நோய்களுக்கு ஒரே நிவாரணம்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR