மாரடைப்புக்கு இணையாக சைலண்ட் கில்லராக மாறிவரும் இந்த பிரச்சனை... உஷார் மக்களே....!

 cholesterol control guidelines : மாரடைப்புக்கு இணையாக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அதிக இந்தியர்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருந்து தப்பிக்க என்ன வழி என மருத்து நிபுணர்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 5, 2024, 08:11 PM IST
  • கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படும் ஆபத்து
  • வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட இந்தியா
  • உணவுக்குப் பின் கொலஸ்ட்ரால் டெஸ்ட் எடுக்க வேண்டும்
மாரடைப்புக்கு இணையாக சைலண்ட் கில்லராக மாறிவரும் இந்த பிரச்சனை... உஷார் மக்களே....! title=

கொலஸ்ட்ரால் ஒரு சைலண்ட் கில்லர். இது உங்கள் இதய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை, அதிக கொலஸ்ட்ராலுடன் போராடும் இந்தியர்களுக்கு அதைக் கட்டுப்படுத்த எந்த குறிப்பிட்ட வழிகாட்டுதல்களும் இல்லாமல் இருந்தது. முதன்முறையாக அதிக கொழுப்பை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். லிப்பிட் மேலாண்மையை முறையாக பின்பற்றினால் இந்த சைலண்ட் கில்லர் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். 

இப்போது வரை, இந்திய இருதயநோய் மருத்துவர்கள் 2019 ஆம் ஆண்டில் ஐரோப்பிய இருதயவியல் சங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்தனர். ஆனால் இப்போது முதல் முறையாக, இந்தியாவில் அதிக கொழுப்பை கட்டுப்படுத்த இந்திய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 22 உறுப்பினர்களைக் கொண்ட கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (சிஎஸ்ஐ) குழு இந்த வழிகாட்டுதல்களை ஜூலை 4 அன்று வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமா குறைக்கும் சூப்பர் உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க

டிஸ்லிபிடெமியா என்பது இரத்தத்தில் அதிக கொழுப்பு அல்லது ட்ரைகிளிசரைடுகள் போன்ற அசாதாரண அளவு கொழுப்புகள் (லிப்பிடுகள்) இருக்கும் ஒரு நிலை. இந்த ஏற்றத்தாழ்வு இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். பொதுவாக இது உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. டிஸ்லிபிடெமியா 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது எந்த அறிகுறிகளும் காட்டுவது இல்லை. இருப்பினும் இதய நோய், பக்கவாதம் மற்றும் புற தமனி நோய் போன்ற இருதய நோய்களைக்கு முக்கிய காரணியே இதுதான்.

ஒருவரின் லிப்பிட் புரொபைல் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் அதனை இரத்த பரிசோதனை மூலம் அளவிடலாம். குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்), உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (எச்டிஎல்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் ஒரு பகுதியை உள்ளடக்கிய மொத்த கொழுப்பின் அளவை தீர்மானிக்க ஆய்வகத்தில் மாதிரி பகுப்பாய்வு செய்யப்படுகிறது. புதிய வழிகாட்டுதல்களின்படி, கொழுப்பின் குறைந்தபட்ச அளவு 100 mg/dl (ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்) குறைவாக இருக்க வேண்டும். இதற்கு அதிகமாக இருந்தால் எச்சரிக்கை அவசியம்.

அதிக கொலஸ்ட்ரால் அளவு நாடு முழுவதும் மிகவும் பொதுவானது, ஆனால் இந்த பிரச்சனை குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் இதய நோய்களின் விகிதம் அதிகமாக இருப்பதையும், உலகிலேயே சிவிடியால் ஏற்படும் அதிக முன்கூட்டிய இறப்பு விகிதத்தையும் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் இந்த லிப்பிட் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். சிஎஸ்ஐ ஆய்வின்படி, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா மற்றும் மணிப்பூர் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழும் மக்களில் குறைந்த அளவு HDL-கொலஸ்ட்ரால் (நல்ல கொழுப்பு) இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம், அதிக எல்டிஎல்-கொலஸ்ட்ரால் (கெட்ட கொழுப்பு) அளவுகள் கேரளா மற்றும் கோவாவில் அதிகமாகக் காணப்பட்டது.

புதிய வழிகாட்டுதல்கள் வெறும் வயிற்றில் எடுக்கப்படும் பாரம்பரிய அளவீடுகளைக் காட்டிலும், ஆபத்தை மதிப்பிடுவதற்கும், சிகிச்சையை வழிநடத்துவதற்கும் உணவுக்குப் பிறகு கொழுப்பு டெஸ்ட் எடுக்க பரிந்துரைக்கின்றன. கொழுப்பை உட்கொள்வதை விட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது அடைப்புகளுக்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க | மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவும் 7 பழக்கங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News