Coronavirus Vaccine News: கொரோனா நோய் உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த நோய் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் முதலில் கொரோனா வைரஸ் (Coronavirus) தடுப்பூசி யாருக்கு கிடைக்க வேண்டும்? இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்திலும் விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடந்த வாரம் வியாழக்கிழமை தெரிவித்தார். ஆனால் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று அவர் சைகை காட்டியுள்ளார்.
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சோதனை மூலம் குரங்குகளை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க முடிந்தது. இதற்கிடையில், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ALSO READ | Covaxin: இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசி சோதனை 30 வயதான நபருக்கு செலுத்தப்பட்டது
கொரோனா தொற்றுக்கு எதிராக 165 தடுப்பூசிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன!
உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) பட்டியலின்படி, கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருக்கின்றன. தடுப்பூசி ஆராய்ச்சியின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அனைத்து தடுப்பூசியும் குறைந்தபட்சம் மருத்துவத்திற்கு முந்தைய சோதனை கட்டத்தை எட்டியுள்ளது. சில தடுப்பூசிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. அவை மனிதர்கள் மீது சோதனை செய்யப்படுகிறது. ஒரு ரஷ்ய நிறுவனம் கொரோனா தடுப்பூசியை சில வாரங்களில் அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் விலங்குகள் மீது தடுப்பூசி சோதனைகளை நடத்தி வருகின்றன.
தடுப்பூசி உற்பத்தி குறித்து பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை:
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி (GAVI) தடுப்பூசி உற்பத்திக்காக பல இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோவிட் -19 தடுப்பூசி குளோபல் அக்சஸ் (கோவாக்ஸ்) இன் கூட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை சந்தித்ததாக GAVI தலைமை நிர்வாகி சேத் பார்க்லே தெரிவித்தார்.
ALSO READ | Corona Vaccine: மனித பரிசோதனையின் சில முக்கிய அம்சங்கள்!!
கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான தீவிரம்:
பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி (COVID-19 vaccine) தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், உலகின் அனைத்து நாடுகளும் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதில் ஈடுபட்டுள்ளன.
ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி தலைவர்!
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஆகியவை குரங்குகளை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க முடிந்தது. அதே பத்திரிகையின் மற்றொரு ஆய்வு, ஜான்சன் & ஜான்சன் ( Johnson & Johnson) தடுப்பூசி இதே போன்ற முடிவுகளை அளித்தது என்று கூறுகிறது. தற்போது, இந்த இரண்டு தடுப்பூசிகளும் மனிதர்கள் மீதான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு உட்பட்டுள்ள நிலையில், ஜே & ஜே இன் தடுப்பூசி கட்டம் 1 மற்றும் 2 ஆம் இடத்தில் உள்ளது.
ALSO READ | கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றி: அடுத்த கட்டத்திற்கு நகரும் Oxford Coronavirus Vaccine
பல பணக்கார நாடுகள் நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம்
உலகின் பல பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்கின்றன. இதுபோன்ற 6 நிறுவனங்களுடன் 1 பில்லியன் கொரோனா தடுப்பூசி அளவுகளில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கோவாக்ஸ் ஒப்பந்தத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளன.
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று அமெரிக்காவின் மிகப்பெரிய வைரஸ் நிபுணர் அந்தோனி ஃபாச்சி நம்புகிறார். ஃபாச்சி அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகராகவும் உள்ளார். அவர் கூறுகையில், 'இந்தியாவின் உற்பத்தி திறன் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அனைத்து தடுப்பூசி சோதனைகளும் ஒழுங்குமுறை தரத்தின்படி இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் எனக் கூறினார்.
ALSO READ | Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்