முடி பராமரிப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் முடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால் முடி முற்றிலும் சேதமடையக்கூடும். இதனால் முடி கொட்டும் பிரச்சனையும் தொடங்குகிறது. மறுபுறம், சிலர் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு சில தவறுகளை செய்கிறார்கள், அது முடியை சேதப்படுத்தும், அத்தகைய சூழ்நிலையில், ஈரமான கூந்தலில் என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மறந்து கூட ஈரமான கூந்தலில் இதை செய்யாதீர்கள்
ஈரமான முடியை சீவுவது
நிறைய பேர் தலைமுடி ஈரமாக இருக்கும் போதே சீவுவார்கள். இப்படி ஈரமான முடியில் சீப்பை பயன்படுத்தும் போது, முடி அதிகமாக சேதமடையும். எனவே உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் முடி உதிர்வதை தடுக்க வேண்டுமென நினைத்தால், முடி முற்றிலும் உலரும் வரை காத்திருந்து பின் சீப்பை பயன்படுத்துங்கள்.
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!
கூந்தலை இறுக்கமாக கட்டுவது
தலைக்கு குளித்த பின் பெரும்பாலானோர் தலைமுடியை இறுக்கமாக கட்டுவார்கள். ஈரமான முடியை கட்டும் போது, தலைமுடி அதிகம் சேதமடையும். எனவே இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள். இல்லாவிட்டால் கொத்து கொத்தாக முடி கொட்டும்.
ஹேர் ஸ்ப்ரே
பலர் ஈரமான கூந்தலில் ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இது உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும். எனவே, முடி காய்ந்த பின்னரே ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துங்கள்.
தலைமுடியை தேய்ப்பது
தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்துவதற்கு நாம் பெரும்பாலும் துண்டால் துடைப்போம். ஆனால் இனிமேல் அப்படி முடியை உலர்த்தாதீர்கள். ஏனெனில் இச்செயலால் தலைமுடி அதிகம் உடையும் மற்றும் அதிக சிக்கலுமாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ