Hair Care : முடி வளர்ச்சிக்கு இந்த 3 பொருட்கள் இருந்தா போதும்

Hair Care in Winter : பொதுவாக மக்கள் முடி வளர்ச்சிக்கு பல வழிகளை முயற்சி செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், தண்ணீரில் கலந்துள்ள சில பொருட்களைக் கொண்டு முடியைக் கழுவினால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 7, 2022, 03:23 PM IST
  • முடி வளர்ச்சிக்கு இந்த முறையை முயற்சிக்கவும்.
  • இவை முடியை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • இந்த 3 பொருட்களையும் தண்ணீரில் கலந்து தலையில் தடவவும்.
Hair Care : முடி வளர்ச்சிக்கு இந்த 3 பொருட்கள் இருந்தா போதும் title=

குளிர்காலத்தில் முடி பராமரிப்பு : பொதுவாக மக்கள் முடி வளர்ச்சிக்கு பல வழிகளை முயற்சி செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், தண்ணீரில் கலந்து சில பொருட்களைக் கொண்டு முடியைக் கழுவுவது முடி வளர்ச்சிக்கு உதவும். இது முடியை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வாருங்கள் இன்றைய கட்டுரையில் இந்த முறைகள் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

பொதுவாக வைட்டமின் ஈ மற்றும் புரதம் இரண்டும் ஆளிவிதை நீரில் ஏராளமாக உள்ளன. எனவே ஆளி விதை நீரில் முடியைக் கழுவி வந்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி, மறுநாள் உங்கள் தலைமுடியைக் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பு அபாயத்தை குறைக்க கவனத்தில் கொள்ள வேண்டிய ‘முக்கிய’ விஷயங்கள்!

அதேபோல் எலுமிச்சை நீரை பயன்படுத்துவதன் மூலமும் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். இதற்கு தண்ணீரில் எலுமிச்சையை பிழிந்து கலவையை தயார் செய்துக கொள்ளவும். இந்த நீரை உங்கள் தலைமுடியை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவவும். இப்படி செய்வதால் முடி வளருவதோடு மட்டுமல்லாமல் வேர்களும் வலுப்பெறும்.

அரிசி நீர் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அரிசியை ஊறவைத்து அந்த நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும். இது முடியை வலுப்படுத்துவது மட்டுமின்றி முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News