உலகம் முழுவதும் இருக்கும் மக்களில், பலர் பெரிய அளவில் சந்திக்கும் பிரச்சனை, உடல் பருமன். இதை குறைக்க, பலர் நினைத்தாலும் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது, கொஞ்சம் பின்வாங்கி விடுகின்றனர். உடல் எடையை சீக்கிரமாக குறைக்க, நாம் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. அத்துடன் சேர்த்து டயட் இருப்பதும் முக்கியமாகும். அந்த டயட்டில், நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிமான ஒன்று, இஞ்சி. இதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என கூறப்படுகிறது. இதில் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க:
நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால், இஞ்சி டீயில் எலுமிச்சையை சேர்த்து குடிக்கலாம். இதை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக பலன் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுமாம். எலுமிச்சையில் கலோரிகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பசியின் போது அதிகமாக சாப்பிடாமல் குறைவாக சாப்பிட்டாலே வயிறு முழுமையாகும் உணர்வை கொடுக்கும். இது, உடல் எடை மற்றும் வயிற்று தொப்பையையும் குறைக்க உதவும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க..
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துகள் ந் இறைந்திருக்கின்றன. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் சளி மற்றும் இருமல் சமயத்தில் இதை குடிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அழற்சி எதிர்ப்பு தன்மைகளும் இருக்கின்றன. காய்ச்சல் மற்றும் உடல் நலனை கெடுக்கும் தொற்றுகளை கொடுக்கும் கெட்ட பாக்டீராய்களை அழிக்க, இஞ்சி-லெமன் டீ உதவுகிறது.
செரிமான கோளாறை தடுக்க..
உங்களுக்கு அடிக்கடி வயிற்று பிரச்சனை ஏற்பட்டால், எலுமிச்சையுடன் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம். இந்த முறையை பல நூறு ஆண்டு காலமாக நம் நாட்டில் பின்பற்றி வருகின்றன. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆய்வில், வயிறு உப்பசமாவதையும், வயிறு அழற்சி ஏற்படுவதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற சமயங்களில் இதனை உட்கொள்ளலாம்.
குமட்டலை நிறுத்தும்..
லெமன் இஞ்சி டீ, குமட்டலில் இருந்து விடுதலை பெற உதவும். இஞ்சி, எலுமிச்சை ஆகிய இரண்டிலுமே குமட்டலை நிறுத்தும் திறன்கள் இருக்கின்றன. கபகப என எரியும் வயிற்றையும், இந்த டீ சரிசெய்யும். எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் ஆசிட், வயிற்றில் இருக்கும் அமிலங்களை பாலன்ஸ் செய்யும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பலர், குமட்டலால் அவஸ்தைப்படுவர். அவர்கள், அப்படி உணரும் சமயங்களில் இதனை எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமன்றி, பயண சமயங்களிலும் கூட ஒரு சிலரால் குமட்டலை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். அவர்களும் இதை குடிக்கலாம்.
மேலும் படிக்க | Side Effects of Pistachio: பிஸ்தா பருப்பு... ‘இந்த’ பிரச்சனை இருந்தா விலகியே இருங்க!
இந்த டீயை எப்படி செய்வது?
>4 கப் தண்ணீர்
>முக்கால் கப் நாட்டுச்சர்க்கரை
>கால் கப் இஞ்சி
>3 டீ பேக்
>2 எலுமிச்சை (பிழிந்தது)
>3 டீஸ்பூன் தேன்
செய்முறை:
>முதலில் தண்ணீரில் இஞ்சியை துருவி கலந்து அதனுடன் நாட்டு சர்க்கரையை கலக்க வேண்டும்.
>இதை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, மிதமான சூட்டில் பிழிந்த லெமனை ஊற்ற வேண்டும்
>இதை இறக்கி, மிதமான சூடு வரும் வரை டீ பேக்கை அதில் போட்டு 3 முதல் 5 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்,
>வேண்டுமானால் தேனை இதில் கலந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ