யூரிக் அமிலம் பிரச்சனையைக் கட்டுப்படுத்த பருக வேண்டிய 5 பானங்கள்

Control Uric Acid: அதிக யூரிக் அமிலத்தால் அவதிப்படுகிறீர்களா? ரத்தத்தில் அதிகரித்துள்ள யூரிக் அமிலத்தை சில பானங்கள் அகற்றிவிடும்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2023, 04:30 PM IST
  • ரத்தத்தை சுத்தீகரிக்கும் அருமையான பானங்கள்
  • ரத்தத்தில் அதிகரித்துள்ள யூரிக் அமிலத்தை அகற்றும் பானங்கள்
  • யூரிக் அமிலத்தை அசால்டாய் கட்டுப்படுத்தும் டிரிங்ஸ்
யூரிக் அமிலம் பிரச்சனையைக் கட்டுப்படுத்த பருக வேண்டிய 5 பானங்கள் title=

உங்களுக்கு கடுமையான மூட்டுவலி அல்லது மூட்டுகள் அளவுக்கு அதிகமாக வீங்கியிருந்தால், அது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அதிக அளவு அதிகரித்திருக்கலாம், அல்லது ஹைப்பர்யூரிசிமியா காரணமாக இருக்கலாம். ரத்தத்தில் யூரிக் அமில அளவு 7mg/DLக்கு மேல் செல்லும் போது பிரச்சனைகள் எழுகின்றன. இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். பியூரின் எனப்படும் முக்கியமான வேதிப்பொருளை உடல் உடைக்கும்போது இது உருவாகும் யூரிக் அமிலத்தின் பெரும்பகுதி பொதுவாக சிறுநீரகங்கள் வழியாகச் சென்று சிறுநீரின் வடிவில் உடலை விட்டு வெளியேறுகிறது. 

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும். ஹைப்பர்யூரிசிமியா படிகங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கலாம், அவை காலப்போக்கில் மூட்டுகளில் படிந்து கீல்வாதத்தை ஏற்படுத்தும். 

இரத்தத்தில் அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் என்ன?
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் ஏற்படும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதான பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும், அறிகுறிகள் மூலம் அமிலப் பிரச்சனையை தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | அதிக கால்சியமும் ஆபத்து தான்! தமனிகளில் கால்சியம் படிந்தால் என்ன ஆகும்?

யூரிக் அமில அதிகரிப்பைத் தெரிந்துக் கொள்ளும் பொதுவான அறிகுறிகள் சில...
மூட்டுகளில் கடுமையான வலி
மூட்டு விறைப்பு
இயங்குவதில் சிரமம்
மூட்டுகளில் வீக்கம்
மூட்டுகள் வீங்கி வலி அதிகமாவது
அதிக அளவு பியூரின்களைக் கொண்ட உணவுகள் மற்றும் பானங்களால் உடலில் ப்யூரின் அளவு அதிகமாகும். இது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது.
யூரிக் அமில அதிகரிப்பால் கஷ்டப்படுபவர்கள், இந்த பானங்களை பருகினால், அமில அதிகரிப்பு கட்டுக்குள் வரும்.  

க்ரீன் டீ 
கிரீன் டீயின் நன்மைகள் பல்வேறு நோய் பாதிப்புகளை சரி செய்கிறது. விதமான உடலில் அதிக யூரிக் அமிலத்தை நிர்வகிப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமானது. ஆய்வுகளின்படி, கிரீன் டீயை தொடர்ந்து மிதமான அளவு குடிப்பது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும். கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
 
குறைந்த கொழுப்புள்ள பால் 

கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் குடிப்பது உங்கள் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். எனவே, கொழுப்பு குறைந்த பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர் மற்றும் மோர் ஆகியவற்றை குடித்து வந்தால், கீல்வாதத்துடன் போராடுபவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை குறைக்க வந்துவிட்டது குளிர்கால கீரை! பியூரின் குறைவான பதுவா கீரை

எலுமிச்சை சாறு
கீல்வாதம் அல்லது அதிக யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடிக்கத் தொடங்கினால், அது யூரிக் அமிலத்தை சீர்செய்யும். எலுமிச்சை சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் உள்ள யூரிக் அமில அளவை நடுநிலையாக்க உதவுகிறது. ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

மூலிகை தேநீர்
கெமோமில், லாவெண்டர், பச்சை மற்றும் ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு கிளாஸ் மூலிகை தேநீர், கீல்வாத பிரச்சனைகளை நிர்வகிக்கவும் உதவுகிறது. ஏனென்றால், கீல்வாத அறிகுறிகளை சீர் செய்வதற்கு திரவ உணவுகளை அதிகரிப்பது அவசியம் ஆகும்.

காபி
காபி குடிப்பது அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள பாலில் (சர்க்கரை இல்லாமல்) தயாரிக்கப்பட்ட காபியை உட்கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், அதற்காக அளவுக்கு அதிகமாக காபி குடிக்க வேண்டாம்.  

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யூரிக் ஆசிட் கட்டுப்படுத்தும் அருமையான கீரை! ப்யூரினை தூளாக்கும் கடுகுக்கீரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News