இந்த 4 உணவுகளை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

Foods For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க விரும்பினால், அவர்கள் கிளைசெமிக் குறியீட்டின் அளவு குறைவாக இருக்கும் சிலவற்றை சாப்பிட வேண்டும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 14, 2022, 08:47 AM IST
  • நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க டிப்ஸ்
  • கிளைசெமிக் குறியீட்டின் அளவு குறைவாக இருக்கும் உணவுகள்
  • சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியவை
இந்த 4 உணவுகளை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் title=

சர்க்கரை நோய்க்கான உணவுகள்: பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பரவிய சர்க்கரை நோய் தற்போதைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இந்த பிரச்சனை மரபணு ரீதியாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக ஏற்படுகிறது. நீரிழிவு நோய் சிறுநீரக நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த மருத்துவ நிலையில், இன்சுலின் சுரப்பு அல்லது பயன்பாடு சரியாக செய்ய முடியாது. எனவே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது என்று கூறியுள்ளார்.

சர்க்கரை நோயாளிகள் இந்த 4 உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

1. ப்ரோக்கோலி
ஒவ்வொரு பச்சை காய்கறியும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் ப்ரோக்கோலி ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. எனவே இந்த ப்ரோக்கோலியை சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!

2. முழு தானியங்கள் 
நமது அன்றாட உணவில் முழு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க விரும்பினால், பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதிலாக, சாதாரண கோதுமை மாவுக்கு பதிலாக பழுப்பு அரிசி மற்றும் பல தானிய மாவு ரொட்டிகளை சாப்பிட வேண்டும்.

3. முட்டை
பொதுவாக காலை உணவில் ஒரு முட்டையையாவது சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க ஆரம்பிக்கும், இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கட்டுப்படும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான புரதச்சத்து முட்டையில் உள்ளது.

4. பருப்பு 
பருப்பு என்பது நம் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அங்கமான உணவு, அதன் கலவை சாதம் மற்றும் ரொட்டி இரண்டிற்கும் பொருந்தும், ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், பருப்பு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது, எனவே இது சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News