மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்தியங்கள்

மலச்சிக்கல் பிரச்சனையை சரியான நேரத்தில் கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2022, 04:40 PM IST
  • உணவுகளுக்கு இடையில் போதுமான இடைவெளியும் அவசியம்.
  • வெந்நீர் அருந்தும் போது அது உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
  • பால் ஒரு முழுமையான உணவு என்று அழைக்கப்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்தியங்கள் title=

மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியம்: தற்போதைய காலகட்டத்தின் பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், உடலில் பல பிரச்சனைகள் எழுகின்றன. இவற்றில் மலச்சிக்கலும் ஒன்று. சரியான நேரத்தில் இதனை கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. மருத்துவரிடம் இதற்கான சிகிச்சை கிடைத்தாலும், வீட்டு வைத்தியத்தின் மூலம் அதனை எளிதாக தீர்க்கலாம்.  மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட  கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம்

1. உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்

எண்ணெய் அதிகம் உள்ள பொரித்த உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிடுகிறோம். நீங்கள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற விரும்பினால், பொரித்த உணவுகளில் இருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் செரிமானம் பிரச்சனையை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாகக் கூடிய அத்தகைய உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உணவுகளுக்கு இடையில் போதுமான  இடைவெளியும் அவசியம்.எனவே ஒவ்வொரு மணி நேரமும் ஏதாவது சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

2. ஓமம் மற்றும் சீரகம்

மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க ஓமம் மற்றும் சீரகத்தை பயன்படுத்தலாம். இந்த இரண்டு மசாலாப் பொருட்களையும் குறைந்த தீயில் வறுத்து பொடியை தயார் செய்யவும். பிறகு இந்த பொடியில் கருப்பு உப்பு கலந்து கொள்ளவும். இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

3. சூடான தண்ணீர் குடிக்கவும்

காலையில் எழுந்தவுடன் காலி வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வெந்நீர் அருந்தும்போது அது உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

4. சூடான பாலில் நெய் கலந்து குடிக்கவும்

பால் ஒரு முழுமையான உணவு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சூப்பர்ஃபுட்டில் பல ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக கலக்கப்படுகின்றன. இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சிறிது நெய் கலந்து குடித்து வர, வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News